இரவில் பாலுடன் நெய் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை முடிவு செய்யும், சரிவிகிதமான முறையில் காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொண்டால் மட்டுமே உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கப்பெற்ற நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
மிக முக்கியமாக நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த சின்ன சின்ன விடயங்களை பின்பற்றினாலே பல பலன்களை பெறலாம்.
இரவில் ஒரு டம்ளர் பால் குடிப்பது பலன்களை தரும் என கேள்விப்பட்டிருப்போம், அதில் நெய் கலந்து குடித்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
* பாலில் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் செரிமானம் மேம்படும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, மலச்சிக்கல் தொந்தரவுகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்று வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம், அதாவது வயிற்றை சுத்தமாக்கும்.
* பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால் உடல் வலிமை அதிகரிக்கும், நெய் கலந்து குடிப்பதால் எலும்புகள் வலுவடைவதுடன் தசைகளுக்கும் வலிமை அளிக்கிறது.
* மிக முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் இல்லாமல் குடல் சீராக இயங்கும் போது உணவின் சத்துக்கள் கிரகிக்கப்பட்டு நோய்கள் அண்டாது, அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து விடுகிறது.
* நெய்யில் உள்ள ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் மூட்டு வலியிலிருந்து நிவாரணத்தை வழங்குகின்றன, கால் பிடிப்புகள், தசை வலி மற்றும் எலும்புகள் பிரச்சனைக்கும் தீர்வாகிறது.
* கர்ப்பிணி பெண்கள், பாலில் ஒரு டீஸ்பூன் நெய் கலந்து குடிப்பது வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது, எனினும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |