இந்த பூவை சூடு பண்ணி குடித்தால் சர்க்கரை நோய் அலண்டு ஓடிவிடுமாம்!
நம்முடைய வீட்டில் வைத்து வளர்க்க வேண்டிய முக்கியமான செடிகளில் இந்த சங்கு செடியும் ஒன்று. சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். கண்கவர் நீல நிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக் காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான் என்று 3 வகையாக வளர்கிறது.
வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும். மலர்கள் என்றாலே அவற்றிற்கு அதிக மணம் இருக்கும் என்பது இயல்பான ஒன்றே. ஆனால், அவற்றில் உள்ள மருத்துவ குணத்தை நாம் அறியாமலே இத்தனை காலம் கடந்து வந்து விட்டோம். ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் பல வித ஆரோக்கிய ரகசியங்கள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.
பூக்களை ரசிப்பதற்கும், சூடுவதற்கும், அழகுக்காக வீட்டில் பயன்படுத்துவதற்கும் பெரும்பாலும் நாம் இவற்றை உபயோகிக்கின்றோம். குறிப்பாக தாய்லாந்து நாட்டில் இந்தப் பூவினை அஞ்சான் மலர் என்று சொல்கிறார்கள். இதற்கு காரணம் இந்தப் பூவினை கையில் எடுத்துக் கொண்டு சென்றாலோ, அல்லது இந்தப் பூவினை பார்த்து விட்டு சென்றாலும் அவர்கள் சென்ற காரியம் கட்டாயம் வெற்றி அடையும் என்ற ஒரு நம்பிக்கையும், அவர்கள் இடத்தில் உள்ளது என்று சொல்லபோனால் அது கட்டாயம் பொய்யாகாது.
அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை தரக்கூடியதுதான் இந்த நீல வண்ண சங்கு பூ. சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. இவற்றின் மருத்துவ தன்மையை நாம் உணர்ந்தால் கட்டாயம் மிகவும் கவனத்துடன் செயல்படுவோம்.
அந்த வகையில் அரிய வகை பூக்களில் ஒன்றான சங்கு பூவிலும் அத்தகைய மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களை தடுக்கும் சங்கு பூவை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம். இரைப்பு நோய் தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.
நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும். யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம்.
பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும். பேதியைக் கட்டுப்படுத்த பேதியைக் கட்டுப்படுத்த மோர் அல்லது எலுமிச்சம் பழச் சாறு குடிக்கலாம். தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும். சர்க்கரை நோய் குணமாக சங்கு பூ, சர்க்கரையின் அளவை உடலில் கட்டுப்படுத்துமாம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் என "காம்பிளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்' என்ற ஆய்வு இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.