எடை சரசரவென குறைய வேண்டுமா? இரவு தூங்கும் முன் பாலில் இத மட்டும் கலந்து குடிங்க
இரவில் தூங்குவதற்கு முன்னர் சிலருக்கு பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். பால் ஒரு நிறையுணவு என்றே சொல்லலாம். பாலில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்துள்ளன, இது எலும்புகளை வலுப்படுத்தவும் தசைகளை சரிசெய்யவும் உதவுகிறது.
இதில் டிரிப்டோபான் மற்றும் மெலடோனின் போன்ற இயற்கை சேர்மங்களும் காணப்படுகின்றன. இதனால் இரவு முழுவதும் மனம் அமைதியாக நல்ல உறக்கத்திற்கு செல்ல முடியும்.
இவ்வளவு நன்மை தரும் இந்த பாலில் இலவங்கப்பட்டை சேர்த்து குடித்தால் உடலுக்கு பல மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றது. இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இலவங்கப்பட்டை பால்
சிறந்த தூக்கம் : இலவங்கப்பட்டை பால் உடலை ரிலாக்ஸ் செய்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. இலவங்கப்பட்டை மெலடோனின் மற்றும் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இரவில் எம்மால் நன்றாக தூங்க உதவும் ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது: பால் மற்றும் இலவங்கப்பட்டை கலவையானது ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது: இலவங்கப்பட்டை பால் வயிற்றில் வீக்கம், அஜீரணத்தைக் குறைத்து, ஒரு நல்ல ஆரோக்கியமான குடலை மேம்படுத்த உதவுகிறது. இது தவிர வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அஜீரணம், வாய்வு மற்றும் எரிச்சல் போன்ற குடல் நோய்களுக்கு இலவங்கப்பட்டை உதவும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது : இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இலவங்கப்பட்டை உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் இன்சுலின் சர்க்கரையை செல்களுக்குள் சென்று நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
எலும்புகளை வலுப்படுத்துதல்: உடலுக்கு பால் கால்சியத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் இலவங்கப்பட்டை அதன் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக நமது உடலில் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக மூட்டு வலியைக் குறைக்க உதவும். இலவங்கப்பட்டையில் காணப்படும் "சின்னமால்டிஹைடு" என்ற சேர்மம், மூட்டு வலிக்கு பங்களிக்கும் ஒரு காரணியான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இந்த கலவையானது கெட்ட கொழுப்பை அதாவது (LDL) குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் மேம்படுத்துகிறது. இது உடலில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |