செவ்வாய் கிரகத்தை ஒத்திருக்கும் 400 ஆண்டுகள் மழையே பெய்யாத பிரதேசம் எங்குள்ளது?
அட்டகாமா எனும் பாலைவனத்தில் 400 ஆண்டுகள் மழையே பெய்யாமல் இருக்கும் அதிசயமான ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
அட்டகாமா பாலைவனம்
தற்போது வரை கற்பனை கதையில் கேட்டுக்கொண்டிருக்கும் பாலைவனம் தான் அட்டகாமா பாலைவனம். இந்த பாலைவனத்தில் 400 ஆண்டுகளாக கொஞ்சம் கூட மழை பெய்யவே இல்லையாம்.
இது வடக்கு சிலியில் 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் நீண்டுள்ள அட்டகாமா பாலைவனம் பூமியின் மிகவும் வியக்கத்தக்க நிலப்பரப்புகளில் ஒரு பகுதி மட்டுமே. இங்கே பல நுறு வருடங்களாக மழையே இல்லை என அப்பகுதிக்கு அருகே வாழும் மக்கள் கூறுகின்றனர்.
இது தவிர இது ஆராய்ச்சி மூலமம் அறியப்பட்டுள்ளது. இங்கு உப்பு அடுக்குகள், காற்றினால் செதுக்கப்பட்ட பாறை வடிவங்கள், பரந்த மணல் திட்டுகள் கொண்ட நிலப்பரப்பு காணப்படுகின்றது.
இந்த பாலைவனப பகுதியை பார்க்கும் போது செய்வாய் கிரகத்தின் தோற்றம் போலவே காணப்படும். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அதன் செவ்வாய் ரோவர்களுக்கான சோதனைக் களமாக இந்த பாலைவனத்தையே பயன்படுத்துகிறது.
இந்த பாலைவனத்தில் மழை இல்லாவிட்டாலும் இங்கு சில உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த உயிரினங்கள் வாழ ஆதாரமாக இருப்பது 'கமன்சாகா' எனப்படும் கடலோர மூடுபனிதான்.
இது அடர்ந்த கடலோர மூடுபனி இந்தப் பாலைவனத்தின் அரிதான உயிரினங்களைத் தக்கவைக்க உதவுகிறது. பசிபிக் பெருங்கடலில் இருந்து வீசும் இந்த மூடுபனி, பாலைவனத்திற்கு சற்று ஈரப்பதத்தைக் கொடுக்கும்.
விலங்குகளுக்கு போதுமான தண்ணீரை இந்த மூடுபனியில் காணப்படும் பாசிகள் மூலம் பெற்றுக்கொள்கிறது. இந்த அட்டகாமா பாலைவனத்தில் எல் டாட்டியோ கீசர்ஸ் என்று அழைக்கப்படும் இயற்கை அதிசயத்தையும் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |