பற்கள் விழுவது போல் கனவு வருதா? அதற்கு இது தான் அர்த்தம்!
நாம் ஆழ்ந்த உறக்கத்தில் சுய நினைவை இழந்து இருக்கும் போது நம்முடைய ஆழ்மனதில் உள்ள எண்ணங்கள் தான் கனவுகளாக தோற்றம் பெறுவதாக கனவு பற்றிய அறிவியல் ஆராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நமது ஆழ்மனம் எவ்வகையான உணர்வுகளில் சிக்கிக்கொண்டிருக்கின்றுதோ அதனை பிரதிபளிக்கும் வகையிலேயே கனவுகள் வருகின்றன.
கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் நமக்கு வரும் கனவுகளுக்கும் எதிர்கால நிகழ்வுளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் பற்கள் விழுவதை போன்ற கனவுகள் வருகின்றது என்றால், அதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அதற்கான பலன்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கனவின் அர்த்தம்
கனவில் உங்கள் பல் விடுவது போல் காண்கின்றீர்கள் என்றால் வேலை இழப்பு, உடல் நலப்பிரச்சினைகள் என்பன சிக்கல்கள் குறித்து அதிகம் கவலைப்படுகின்றீர்கள் என்று அர்த்தும்.
குறிப்பாக அன்புக்குரிய யாரோ ஒருவரை இழந்துவிடுவமோ என்ற பயம் உங்கள் ஆழ்மனதில் குடிகொண்டிருப்பதன் விளைவானவே இந்த கனவு வருகின்றது.
வயதாகுவதை நினைத்து அதிகம் கவலை கொள்கீன்றீர்கள் என்றாலும் பல்கள் விருவது போன்ற கனவு வரும்.
பணம் அல்லது குழந்தையை இழப்பது போன்ற உணர்வு ஆழ்மனதில் அதிகரிக்கும் போதும் பற்கள் விழுகின்ற மாதிரி கனவு எழு ஆரம்பிக்கும்.
பலன்கள்
பற்கள் உதிர்ந்து விழுவது போன்ற கனவு கண்டால் உங்களுக்கு எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஆபத்து குறித்து ஆழ்மனம் எச்சரிக்கின்றது என அர்த்தம். ஏதேனும் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்பிருக்கின்றது.
நம்முடைய பெற்றோர், உறவினர்களின் பற்கள் விழுவதைப்போல கனவு வந்தால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றது.
கனவில் உங்களின் நண்பரின் பற்கள் விழுவது போல கனவு கண்டால் அந்த நபருக்கும் உங்களுக்கும் இடையில் ஏதோ பெரிய வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
பண நெருக்கடி, கடன் பிரச்சினையில் சிக்கியிக்கொள்ள போகின்றீர்கள் என்றாலும் உங்களின் பல் விழுவது போல் கனவு வரும். இவ்வாறு கவவு காண்கின்றீர்கள் என்றால் தொழில் விடயங்களிலும், உடல் ஆரோக்கியத்திலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |