இந்த கனவுகள் அடிக்கடி வருதா? அப்போ ஏதோ கெட்டது நடக்க போகுதுன்னு அர்த்தம்
பொதுவாகவே இரவிலும் சரி பகலிலும் சரி தூங்கும் போது கனவு வருவது ஒரு இயல்பான விடயம் தான். சில சமயம் கனவுகள் எங்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைகின்றது. அது போல் சில சமயம் அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய கனவுகள் ஏற்படலாம்.
ஆனால் கனவு சாஸ்திரங்களின்படி கனவுகள் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே எச்சரிக்கக்கூடிய ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகின்றது.
கனவில் தோன்றுவதை போலவே நிஜத்தில் நடக்கும் என்று அர்த்தம் கிடையாது. கனவுகளுக்கான பலன்கள் மட்டுமே நடக்கும். எப்படி எந்த மாதிரியான கனவு வந்தால் அதிஷ்டம் கிடைக்கும் மற்றும் எந்த கனவுகள் தீமையை எச்சரிக்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ராஜயோகம் இந்த 3 ராசியினருக்கு தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க
மங்களகரமான கனவு
வாழ்வில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் மங்களகரமாக விடயங்களையும் சில கனவுகள் எச்சரிக்கின்றது. கனவு சாஸ்திரத்தின் பிரகாரம் கனவில் நீங்கள் அருவியை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இது வரையில் வாழ்வில் சந்தித்த பிரச்சினைகள் எல்லாம் தண்ணீரில் குப்பைகள் அடித்து செல்வது போல் போய்விடும். இந்த கனவு மகிழ்ச்சிகரமான எதிர்காலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.
அது போல் பறவை பறப்பதை கனவில் காண்பதும் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியது. வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிப்பதுடன் நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
அசுப கனவு
நீர் வீழ்ச்சி அழுக்காகவோ, அல்லது வெண்டையாக இல்லாமல் வேறு நிறத்தில் இருப்பது போன்றோ கனவில் வந்தால் இது அசுபத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு கனவில் வந்தால் எதிர்காலத்தில் ஏதோ பிரச்சினையை சந்திக்கப்போகின்றீர்கள் என்று அர்த்தம். எனவே மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |