வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு பக்கவிளைவுகளா? பலரும் அறியாத உண்மை
ஆரோக்கியத்தை அளிக்கும் வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அனைத்து காய்கறிகள், பழங்களிலும் மனித உடம்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது. ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமாக சத்துக்கள் உள்ளது.
அதில் ஒன்று தான் வெண்டைக்காய். வலுவலுப்பாக இருக்கும் என்பதால் பலரும் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் இந்திய சமையலறையில் அதிகமாக சேர்க்கப்படும் காய்களில் ஒன்று தான் வெண்டைக்காய்.
வெண்டைக்காயில் நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், மெக்னீசியம் வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகளை நாம் தெரிந்து வைத்திருக்கும் இத்தருணத்தில் வெண்டைக்காய் தண்ணீரால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும். அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காய் நீரின் பக்க விளைவுகள்
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் நீரை எடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில் இந்த நீரில் அதிகளவு நார்சத்து இருப்பதால், வாயு, வயிறு வலி மற்றும் வீக்கம் ஏற்படும்.
அதே போன்று ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களும் வெண்டைக்காய் நீரை குடிப்பதை தவிர்க்கவும்.
வெண்டைக்காயில் அதிகளவில் இருக்கும் பிரக்டான்ஸ் சிலருக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
வெண்டைக்காயில் இருக்கும் அக்சலேட்டுகள், சிறுநீரக கற்களை உருவாக்குகின்றது. ஆகவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக வெண்டைக்காய் நீரை முதன்முதலாக குடிப்பவராக இருந்தால் சிறிதளவு மட்டுமே எடுத்துக் கொள்ளவும். இதில் ஏதேனும் பக்கவிளைவு ஏற்பட்டால் உடனே குடிப்பதை நிறுத்திக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |