திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய கைக்குழந்தை! காப்பாற்றிய மக்களின் பதற வைக்கும் காட்சி!
சேலம் ஆத்தூரை அடுத்து உள்ள ஆனைவரி முட்டல் அருவில் வனத்துறையினரால் நிர்வாகிப்பட்டு வருகிறது. குற்றாலம் எனப்படும் இந்த அருவிக்கு, சேலம் உட்பட கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அன்றாடம் மழைப்பெய்து வருகிறது. அதேப்போல் கல்வராயன் மலைப்பகுதியிலும் மழைப்பெய்து வருவதால், ஆனைவாரி அருவியில் கடந்த நாள் மாலையில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனாலும், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களில், குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் உள்பட 5 பேர் அருவியின் மறு கரையில் பதறியபடி ஒதுங்கியுள்ளனர்.
இதனால், வெள்ளம் அதிகரித்ததால், உடன் இருந்தவர்கள்,இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறி, குழந்தை, பெண் ஆகியோரை மீட்டுள்ளனர். மற்ற இருவர் பாறை மீது ஏற முயன்றபோது, தவறி வெள்ளித்தில் விழுந்தனர்.
சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சற்று தூரத்தில் கரை ஒதுங்கித் தப்பித்தனர். மேலும், அருவியில் தொடர்ந்து வெள்ளம் கொட்டுவதால், அப்பகுதிக்குச் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை சார்பில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வெள்ளத்தில் சிக்கியவர்களின் பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
வெள்ளத்தில் மாட்டிய கைக்குழந்தையும் அதன் குடும்பத்தையும் காப்பாற்றிய வனத்துறையினர்!#Kallakkurichi #ForestOfficers #IBCTamil pic.twitter.com/gMgLzVt9Y5
— IBC Tamil (@ibctamilmedia) October 26, 2021