மனைவியை கொன்று சூட்கேஸில் எடுத்துச்சென்ற கணவர்... அம்பலமாகிய டெல்டா வைரஸ் நாடகம்
மனைவியைக் கொலை செய்துவிட்டு டெல்டா வைரஸால் இறந்துவிட்டார் என்று குடும்பத்தினரிடம் நாடகமாடிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் பின்பகுதியில் உள்ள காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது.
தகவலின் பேரில் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று, சோதனை செய்த போது பிணத்தின் அருகே தலைமுறையினைக் கைப்பற்றியுள்ளனர். குறித்த தலைமுடியைக் கொண்டு எரிக்கப்பட்டுள்ளது பெண்ணின் சடலம் என்பதை பொலிசார் கண்டறிந்தனர்.
குறித்த பெண் யார் என்பதை தெரிந்து கொள்ள காணாமல் சென்ற பெண்களின் விபரத்தினை எடுத்துள்ளனர். அப்போது புங்கனூர் அடுத்த ராமசாமுத்திரத்தில் அலிபிரி சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டெச்சி புவனேஸ்வரி கடந்த இருதினங்களுக்கு முன்னர் தான் மாயமான விவரம் தெரியவந்தது.
இதையடுத்து குறித்த பெண்ணை அனுமதிக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனைக்கு சென்ற பொலிசார் அங்கிருந்த கமெராவை ஆய்வு செய்ததில், புவனேஸ்வரியின் கணவர் அவரை கொலை செய்துவிட்டு சூட்கேசில் கொண்டு சென்றதும், அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் எரித்ததும் அம்பலமாகியுள்ளது.
உண்மையை தெரிந்த உறவினர்கள் பேரதிர்ச்சியில் நின்றுள்ளனர். காரணம் மனைவியை உறவினர் காணவில்லை என்று புவனேஷ்வரியை தேட வேண்டாம்... அவருக்கு டெல்டா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும், மருத்துவமனை உடலை தராமல் அவர்களே அடக்கம் செய்துவிட்டதாகவும் கூறி உறவினர்களை நம்பவைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
