கொழுப்பு கரைந்து மாயமாகும் டிராகன்! தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம்.
உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் குறைப்பு , நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது , ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும்.
மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சிறந்த ஆற்றலை கொடுப்பது டிராகன் பழத்தின் முக்கியமான பலனாகும். உடலின் மிக பெரிய சொத்து வைட்டமின்-சி. இது டிராகன் பழத்தில் அதிகமாக இருக்கிறது.
வைட்டமின்-சியை தவிர வைட்டமின்-பி சத்தும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இதிலிருக்கும் பி-1, பி-2, பி-3 சத்துக்கள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன, கொழுப்பு அளவை குறைக்கின்றன.
டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ஆகையால் குடல் இயக்கங்கள் சீராக்கப்பட்டு, உணவுகள் செரிமானமும் சீராகுகிறது.
குறிப்பாக குடல் எரிச்சல் நோய் அல்லது குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை தடுக்கிறது.
செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் ப்ரீ ராடிக்கல் எனும் அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது.
இதனால் இதய நோய், புற்று நோய் போன்றவை வருவது தடுக்கப்படுகின்றன. இந்த பழத்தில் காணப்படும் கரோட்டின், புற்று நோய்க்கு எதிரான குணங்களை வெளிப்படுத்துகிறது. கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது.
சோர்வாக இருக்கும் போதும், அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும் போதும், பருவ நிலை மாற்றத்தால் உடலில்மாற்றங்கள் ஏற்படும்போதும் இந்த பழத்தை உட்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.