15 மாதங்களில் 35 கிலோ எடை குறைப்பா? மருத்துவர் ஷர்மிளா சொல்லும் 4 சீக்ரெட்
மருத்துவர் ஷர்மிளா 15 மாதங்ளில் சுமார் 35 கிலோ எடையை குறைத்துள்ளார். அவர் எடைகுறைத்த சீக்ரெட் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மருத்துவர் ஷர்மிளா
ஷர்மிளா இந்திய மருத்துவர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் 4 சீக்ரெட்களை பின்பற்றி, 15 மாதங்களில் தான் 35 கிலோ எடை குறைத்தார் என்பதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷர்மிளா சிட்டிசன், படிக்காதவன், மாப்பிள்ளை, கல்யாண சமையல் சாதம் போன்ற திரைப்படங்களிலும் பகல் நிலவு, வள்ளி, ரோஜா போன்ற சீரியல்கள் வரை என சின்னத்திரையில் நடித்துள்ளார்.
இது தவிர திமுக தொடர்பான அரசியல் விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார். அதாவது சமூகத்தில் பெண்கள் நாய்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் தைரியமாக கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் மருத்துவர் ஷர்மிளா அதிக எடையுடன் இருந்து தற்போது ஆரோக்கிய வழிமுறையில் தன்னுடைய எடையை குறைத்துள்ளார். அதுவும் இது வெறும் 4 சீக்ரெட் என்று கூறி உள்ளார்.
இதுபற்றிய தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில் ஷர்மிளா, “நான் நீண்டகாலக் கூட்டணியொன்றை முறித்துக்கொண்டுள்ளேன். அதுவே என்னுடைய இந்த எடை இழப்புக்கு காரணம். அந்தக்கூட்டணி, மாவுச்சத்துக்களுடனான என் கூட்டணி” என்றுள்ளார்.
இந்த விஷயத்தில் தான் எந்தவொரு சமரசமும் செய்யவில்லை என்றுள்ளார். இதன்படி கார்போஹைட்ரேட் முழுமையாக குறைத்துக்கொண்டு அதனுடன் மூன்று முக்கியமான விடயங்களை செய்துள்ளார்.

அதில் ஒன்று கலோரி குறைப்பு டயட், அன்றாட உடற்பயிற்சி, துரித உணவுகளுக்கு இல்லை போன்றவையாகும். இதில் மிக முக்கியமாக கலோரி குறைப்பு டயட்டை பின்பற்றியதுடன் அன்றாட வாழ்வில் கட்டாயம் உடற்பயிற்சி செய்ததாகவும், மிகக்கடுமையாக துரித உணவுகளை தவிர்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஷர்மிளா.
இதன் மூலமாக தான் 15 மாதங்களில் 35 கிலோ குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 15 மாதங்களுக்கு முன்னர் சுமார் 105 கிலோ எடை இருந்துள்ளார். ஆனால் இதை பின்பற்றி தற்போது 70 கிலோ இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |