நாட்டையே உலுக்கிய கேரள இளம்பெண்களின் மரணம்: நடிகர் மோகன்லால் வெளியிட்ட பரபரப்பு காணொளி
கேரளாவில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையினால் உயிரிழந்ததையடுத்து, நடிகர் மோகன்லால் பரபரப்பு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கொல்லத்தை சேர்ந்த மருத்துவ மாணவி விஸ்மயா நாயர்(22), கடந்த ஆண்டு கிரண்குமாரை திருமணம் செய்துகொண்டார். 100 பவுன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 11லட்சத்தில் கார் கொடுத்தும் வரதட்சணை கொடுமையை அனுபவித்து இறுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கொடுமை தாங்காமல் வீட்டினரிடம் கூறி அழுததோடு, உடல் முழுவதும் கணவனால் ஏற்பட்ட காயங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். நேரில் வந்து பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு பெற்றோர்கள் நேரில் செல்வதற்குள் விஸ்யமா தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்துள்ளது. அது தற்கொலை அல்ல கொலை என்று பெற்றோர் வாதிட்டு வருகின்றனர்.
விஸ்யமயாவின் மரணத்தை அடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விஷின்ஜத்தில் அர்ச்சனா என்கிற24 வயது பெண் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் சுரேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து, 3 லட்சம் வரதட்சணையுடன் வாழ சென்று அங்கு ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
ஜூன்21ம் தேதி அன்று இரவு 11.30 மணி அளவில் அர்ச்சனா இறந்துவிட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது. டீசல் ஊற்றி மகளை கொன்றுவிட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஆண்டும் இதே போல் ஆழப்புழா வல்லிகுன்னத்தில் மார்ச் 21ம்தேதி 19வயதான சுசித்ரா என்ற இளம்பெண் கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து கேரள இளம்பெண்கள் பலரும், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் தங்களது வீட்டு வாசலில் எழுதி ஒட்டியுள்ளது சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
இந்நிலையில் நடிகர் மோன்கால் நடித்து வெளிவர இருக்கும் ஆராட்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதட்சணைக்கு எதிரான காட்சியை வெளியிட்டு, ’’வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்’’என்று வரதட்சணை கொடுமைக்கு எதிரான முழக்கத்தை தெரிவித்திருக்கிறார்.
Say No to Dowry. Let’s strive forward and create a Kerala where there’s justice and equality for women.#Equality #Aaraattu @unnikrishnanb pic.twitter.com/K24xojSJUF
— Mohanlal (@Mohanlal) June 26, 2021