கொரோனா தடுப்பூசி செலுக்கொண்டால் வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம்; குவியும் கூட்டம்!
உலகளவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்த நிலையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அளவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம் என்ற வினோத அறிவிப்பை அந்நாட்டில் உள்ள கிரிஸ்பி கீரிம் என்ற கடை அறிவித்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அட்டையை காண்பித்தால் இலவச டோனட்ஸ் வழங்கப்படும் என அக்கடை தெரிவித்துள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை எத்தனை டோனட்ஸ் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால் கடை முன்பு கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர்.