Double Eviction! அதிரடியாக வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் யார் தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஞாயிற்றுக் கிழமை ஷூட்டிங் சற்றுமுன் நிறைவடைந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வருண் மற்றும் அக்ஷரா வெளியேறி உள்ளதாக ஷாக்கிங் தகவல் கசிந்துள்ளது.
கடந்த அக்டோபர் 3ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதிகட்டத்தை நோக்கி நடைபோடுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இணை பிரியாத ஜோடிகளாக சுற்றித் திரிந்த அக்ஷரா மற்றும் வருண் ஒன்றாக டபுள் எவிக்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பிக் பாஸ் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
9 பேரில் இருந்து இந்த வாரம் 2 பேர் வெளியேறும் பட்சத்தில் மீதமுள்ள 7 பேரில் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சீசனின் டாப் 3 போட்டியாளர்கள் ராஜு, பிரியங்கா மற்றும் தாமரை என அதிகப்படியான ரசிகர்கள் கூறி வரும் நிலையில், மீதமுள்ள 2 இடத்திற்கு சிபி, பாவனி, நிரூப், சஞ்சீவ் மற்றும் அபிநய் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.