இரும்பு தோசைக் கல் எண்ணெய் பிசுப்பா இருக்கா?
மொறுமொறுப்பான தோசை சாப்பிடுவதற்கு இரும்பு தோசைக்கல்லை எவ்வாறு பழக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தோசை
தோசை பிடிக்காத உணவுப்பிரியர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு தோசை அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கின்றது.
அதிலும் தோசையை மொறுமொறுவென ஊற்றி கொடுத்தால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பியே சாப்பிடுவார்கள்.
ஆனால் தற்போது நான்ஸ்டிக் தவாவையே பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில் இதனை பராமரிப்பது என்பது மிகவும் குறைவு மட்டுமின்றி, மொறுமொறுவென தோசையும் கிடைக்கும்.
அதுவே இரும்பு தோசைக்கல்லில் இவ்வாறு மொறுகளான தோசை கிடைக்காது என்பதால் பலரும் விரும்புவதில்லை. ஆனால் இரும்பு கல்லில் தோசை வார்ப்பது தான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.
இரும்பு கல்லை எப்படி கையாள்வது?
இரும்பு தோசைக் கல் துரு பிடிப்பது தான் முக்கியமான பிரச்சினை. இதனால் அதன் வழவழப்பு குறைந்து தோசை சுடுவதில் சிரமம் ஏற்படும். அப்போது, ஒரு மண் அகல் விளக்கை எடுத்து, சூடான தோசைக் கல்லில், துரு இருக்கும் இடத்தில் தேய்க்கலாம். இதன் மூலம் கரியும் துருவும் உதிர்ந்துவிடும்.
கல்லில் இருந்து துரு மற்றும் கரியை அகற்றிய பிறகு கல்லை நன்றாகத் தேய்ந்து கழுவி சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்தலாம். சுடச்சுட மொறுமொறு தோசை கிடைக்கும்.
மற்றொரு முறை என்னவெனில், ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி, ஒரு மூடியை கல் உப்பில் தொட்டு தோசைக் கல்லில் வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் தொடர்ந்து இப்படி தேய்த்தால், துரு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு முற்றிலும் அகன்றுவிடும்.
தோகைக் கல்லை பயன்படுத்தும் முன், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, லேசாக எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்து விடவும். பிறகு தோசை சுட்டால் கல்லில் ஒட்டிக்கொள்ளாமல் நன்றாக வரும்.
புது தோசைக்கல் வாங்கினாலும் தோசை சுடுவது பெரிய கஷ்டமாக இருக்கும். அப்போதும் இந்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றி கல்லைச் சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்தினால் மொறுமொறுவென தோசை கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |