தோசை கருகியதால் நடந்த விபரீதம்: பரிதாபமாக பறிபோன உயிர்
தோசை கருகியதால் ஏற்பட்ட தகராறில் கணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் எஸ் .ஐ .எஸ். எஸ் காலனி நாராயணசாமி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனி (52). இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீட்டில் மனைவி தோசை சுட்டு கொடுக்க சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தோசை கருகியதால் ஆத்திரமடைந்த பழனி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்பு சிறிது நேரம் கழித்து, தனது அறைக்கு சென்று பூட்டிய அவர், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு ஒருமுறை இவ்வாறு குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டார். ஆனால் இந்த முறை விபரீதமாகி உயிர் பிரிந்துள்ளது.