வெளியான வேகத்தில் வசூல் வேட்டை… ‘டோரதி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
டோரதி
சமூகப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. சமூகப் பின்னணியில் உருவான கதை ஓரினச் சேர்க்கை, சாதியப் பின்புலம் உள்ளிட்ட சமூக ரீதியாக பேசப்படும் பல்வேறு விஷயங்களை மையமாகக் கொண்டு ‘டோரதி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

1990களின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதியில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக இப்படம் அமைந்துள்ளது.
குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலவி வந்த சாதிப் பிரிவினைகள், அதன் காரணமாக ஏற்படும் மோதல்கள் மற்றும் வன்முறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
அந்தக் காலகட்டத்தின் சமூகச் சூழலையும், அதற்குள் வாழும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையையும் படம் பதிவு செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்
டோரதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பாக, படத்தின் கதைக்களம் மற்றும் சமூகப் பிரச்சினைகளை அணுகிய விதம் குறித்து பாராட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘டோரதி’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து விடுமுறை நாட்களிலும் ரசிகர்களின் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திரைப்படம் கடந்த மாதம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்களிடையேயும் இப்படம் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடபத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |