ஆப்பில் ஐ போன் 15 சீரிஸ்ல இந்த தவறை செய்யாதீங்க... தீ விபத்து ஏற்படுமாம்
ஆப்பிள் ஐபோன் 15 சீரிசில் மற்ற கேபிளை பயன்படுத்த வேண்டாம் என்று ஆப்பிள் போன் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபோன் 15 சீரிஸ்
கடந்த மாதம் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸ் ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி, டைப் சி சார்ஜிங் போர்டு இவற்றினை வழங்கியுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி டைப் சி கேபிளை ஐபோன் 15 சீரிஸில் பயன்படுத்தினால் சில சிக்கல்கள் ஏற்படும் என்று ஆப்பிள் விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.
ஐபோன் 15ல், ஐபோன் 15 சீரிஸ், ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்ற மாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஐபோன் மொபைல்களுக்கு ஆண்ட்ராய்டு போனின் கேபிளை பயன்படுத்தினால் ஐபோன் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக சீனாவைச் சேர்ந்த விற்பனையாளர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் கோபிளின் விற்பனையை அதிகரிப்பதற்கு இவ்வாறு கூறுவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஐபோன் 15 சீரிசில் உள்ள யு.எஸ்.பி. டைப் சி போர்ட், லைட்னிங் போர்ட்-ஐ விட 15 மடங்கு அதிவேக திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |