மீதமான உணவுகளை சூடு பண்ணி சாப்பிடுபவர்களா நீங்கள்? இனி தவிர்த்திடுங்கள் இல்லையேல் உயிருக்கே ஆபத்து!
பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை இரவில் சூடு பண்ணி சாப்பிடுவதால் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் தெரியுமா?
ஆய்வுகளின்படி, சில உணவுகள் மற்றும் பொருட்கள், மீண்டும் சூடுபடுத்தும் போது, தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது.
அவ்வாறு சூடு செய்து சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றி இங்கு தெளிவாக பார்க்கலாம்.

முட்டை எப்போதும் சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கின்றன. மேலும் முட்டைகளை சமைக்கப் பயன்படுத்தப்படும் மென்மையான வெப்பம் பக்டீரியாவைக் கொல்லத் தவறிவிடும். எனவே, நீங்கள் அவற்றை பின்னர் சாப்பிட்டால், அவை உங்கள் உடலுக்குள் சில பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைட் நிறைந்துள்ளன.

இந்த கலவை நிறைந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும் போது, அவை நைட்ரைட்ஸ்களாகவும் பின் நைட்ரோசமைன்ஸ்களாகவும் மாற்றப்படுகின்றன.
எனவே ஒருமுறை சமைக்கப்பட்ட பீட்ரூட்டை அல்லது beet products-களை தொடர்ந்து சாப்பிடுவது சில வகை கேன்சருக்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.
கீரையில் நைட்ரேட் அதிகம் உள்ளது. அவை மீண்டும் சூடுபடுத்தும் போது, புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரோசமைனாக மாறி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

முட்டைகளைப் போலவே, பச்சைக் கோழியிலும் சால்மோனெல்லா உள்ளது. இது மீண்டும் சூடுபடுத்தும்போது, அவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சிக்கன் உணவுகளை நீங்கள் சமைத்திருந்தால், மீண்டும் சூடுபடுத்தாமல் சாப்பிடுங்கள். சிக்கனை மறுநாள் வைத்திருந்தும் சாப்பிட வேண்டாம். இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரியளவில் தீங்கு விளைவிக்கும்.

ஃப்ளேக்ஸ்சீட் , ஆலிவ் ஆயில் மற்றும் கனோலா ஆயில்ஸ் போன்ற கோல்ட்-பிரெஸ்டு ஆயில்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் பிற நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளன.
இவை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அதே நேரம் வெப்பநிலைக்கு மிகவும் சென்சிட்டிவானவை. இந்த எண்ணெய்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை மீண்டும் சூடாக்குவது உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.