துளசியின் அருகில் இதையெல்லாம் வைக்காதீர்கள்... துர்திஷ்டத்தை ஏற்படுத்துமாம்!
பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துளசி மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. துளசி என்பது இந்திய புராணங்களிலும் இந்து தத்துவத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மூலிகையாகும்.
இது புதினா குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இதன் இலைகள் நறுமணமுள்ளவை, மேலும் இது பெரும்பாலும் சிறிய பூக்களுடன் பூக்கும். இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் மூன்று வகையான துளசிகள் உள்ளன.
அவை ராம் துளசி, கிருஷ்ண துளசி மற்றும் வன துளசி என்பனவாகும். வீட்டில் துளசியை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை தரும் என்பது ஐதீகம்.
ஆனால் துளசியை நட்டுவிட்டால் அதிர்ஷ்டம் கிடைத்துவிடும் என்று அர்த்தம் அல்ல, அந்த துளசியை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் துளசிக்கு அருகில் வைக்கக்கூடாத சில பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி அருகில் வைக்கக் கூடாத பொருட்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, முள் செடி மற்றும் மரங்களை துளசி செடிகளுக்கு அருகில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது, வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது.
அதனால் வாழ்வில் சிக்கல்கள் மற்றும் கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பைத் தொட்டியை துளசியின் அருகில் வைக்க கூடாது. அப்படி செய்வதால் விஷ்ணுவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. துளசிக்கு அருகில் குப்பைத்தொட்டி வைப்பவர்கள் லட்சுமியால் ஆசீர்வாதத்தை பெற மாட்டார்கள்.
துளசிக்கு அருகில் எந்த ஒரு செருப்புகளையும் வைக்கக்கூடாது இது துளசியை அவமதிக்கிறது. இதனால் வீட்டிற்கு துர்திஷ்டம் ஏற்படும் என நம்பப்படுகின்றது. இதனால் வீட்டில் வறுமை ஏற்படும்.
துளசி செடிக்கு அருகில் விளக்குமாறு வைப்பது நல்லதல்ல. இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் நிதி பிரச்சனைகள் மற்றும் சிரமங்கள் ஏற்படும் என சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |