சாணக்கிய நீதி: இந்த குணங்கள் இருப்பவரை தவறியும் திருமணம் செய்ய கூடாது
முன்னைய காலத்தில் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். சாணக்கிய நீதியின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தீய குணம் கொண்டவரைத் தப்பித்தவறியும் திருமணம் செய்துவிட கூடாது என எச்சரித்துள்ளார்.அப்படிப்பட்ட குணங்கள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பொறுமை இல்லாதவர்கள்
வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற நிலையில் கூட பொறுமை இருந்தால் இழந்தவற்றை மீண்டும் நிச்சயம் பெற முடியும். அந்தளவுக்கு பொறுமை என்பது மிகவும் உயர்ந்த குணமாக கருதப்படுகின்றது.
திருமண வாழ்க்கையை பொருத்தவரையில் பொறுமை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.பொறுமையான நபர் எந்த பிரச்சினை வந்தாலும் அனுசரித்து வாழ்வார். பொறுமை இல்லாதவனை ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது. அது திருமண வாழ்வை மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.
மனநிறைவு அடையாதவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி எது கிடைத்ததோ அதை வைத்து திருப்தி அடையும் மனநிலை கொண்டவர்களை திருமணம் செய்வதே அதிர்ஷ்டமான வாழ்க்கையை கொடுக்கும்.
எதிலும் மனநிறைவு அடையாதவர்களை ஒருபோதும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது.இப்படிப்பட்டவர்கள் திருமண வாழ்விலும் தாம்பத்திய உறவிலும் கூட திருப்தியடைய மாட்டார்கள்.
தகாத வார்த்தைகளைப் பேசுபவர்கள்
சாணக்கிய கூற்றுப்படி எப்போதும் மற்றவர்களை மகிழ்விக்க கூடிய வகையில் இனிமையான நல்ல வார்த்தைகளை பேசுபவர்களை திருமணம் செய்துக்கொண்டால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தகாத வார்த்தைகளை பேசுபவர்களை வாழ்வில் துணையாக பெற்றால் வாழ்க்கையே நரகமாகிவிடும்.
அதிகமாக கோபப்படுபவர்கள்
கோபம் என்பது கடவுளுக்கு எதிரானது என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.கோபம் இருக்கும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார். அளவுக்கு அதிகமாக கோபம் கொள்பவரை திருமணம் செய்துக்கொண்டால் வாழ்க்கை முழுவதும் கஷ்டங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டி ஏற்படும்.
இறை நம்பிக்கை அற்றவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி கடவுள் மீது நம்பிக்கை கொண்ட நபரை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். ஒரு வீட்டில் தொடர்ந்து வழிபாடும், பாராயணமும் நடக்கும் போது மகிழ்ச்சியும் செல்வமும் நிலைக்கும். இறை நம்பிக்கை அற்றவர்களை திருமணம் செய்துக்கொண்டால் வாழ்வில் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |