ஹென்னா போடும் போது இந்த தவறை செய்யாதீங்க! பெண்களே... எச்சரிக்கை
beauty
women
henna
By Nivetha
நீங்கள் தலைக்கு ஹென்னா பயன்படுத்தியும் உங்கள் தலைமுடி நரைத்திருந்தால் நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம்.
அந்த தவறுகள் என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஹென்னா போடும் போது இந்த தவறை செய்யாதீங்க
- தலைக்கு ஹென்னா போடும் தயிரை சேர்ப்பதால், அது எதிர்பார்க்கும் பலனைத் தராது. ஏனெனில் ஹென்னாவுடன் தயிரை சேர்க்கும் போது, அதில் உள்ள புரோட்டீன்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்கி, அதன் காரணமாக முடிக்கு புரோட்டீன் கிடைக்காது. ஆகவே இத்தவறை செய்யாதீர்கள்.
- ஹென்னாவை நீரில் கலந்த பின் அதை போதுமான அளவு ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்தால் தான் அது தலைமுடிக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
- அவசர அவசரமாக நீரில் கலந்து, தலைக்கு பயன்படுத்தினால், ஹென்னாவின் நிறம் முடியில் ஏறாது. எனவே ஹென்னாவை நீரில் கலந்த பின் சுமார் 10 முதல் 12 மணிநேரம் ஊற வைத்து, பின்னர் பயன்படுத்துங்கள்.
- பெரும்பாலான மக்கள் ஹென்னா பயன்படுத்தவதற்கு முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவிக் கொள்வார்கள். ஆனால் இப்படி எண்ணெய் தடவுவதால், தலைமுடியில் ஒரு லேயரை எண்ணெய் உருவாக்குகிறது. இதன் காரணமாக ஹென்னாவின் நிறம் முடியில் ஒட்டாமல் இருக்கும். ஆகவே உங்கள் முடியின் நிறம் மாற வேண்டுமென்று நினைத்தால், எண்ணெய் தடவுவதை நிறுத்துங்கள்.
- ஹென்னாவை சாதாரண நீரில் பயன்படுத்தினாலும் தலைமுடியில் நிறம் ஒட்டுவதில்லை என்று பலர் கூறுவதுண்டு.
- அப்படிப்பட்டவர்கள் சாதாரண நீருக்கு பதிலாக காபி அல்லது டீ நீரைப் பயன்படுத்தலாம்.
- அதுவும் காபி அல்லது டீ தூளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டி அந்நீரால் ஹென்னாவை பேஸ்ட் செய்து ஊற வைக்க வேண்டும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US