காலையில் எழுந்தவுடன் கண்ணாடி பார்ப்பவரா நீங்க? அப்போ உடனே இதை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே இந்து மத சாஸ்திரத்தில் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அந்தவகையில் காலையில் குறிப்பிட்ட சிலவற்றை பார்த்து உங்கள் நாளைத் தொடங்கினால், வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படும் அதே சமயம் காலையில் எழுந்தவுடன் பார்க்க கூடாத விடயங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில விடயங்களை காலை எழுந்தவுடன் பார்ப்பது மிகவும் அசுபமாக கருதப்படுகின்றது. அந்த வகையில் துர்திஷ்டத்தை ஏற்படுத்தும் சில விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
காலையில் பார்க்க கூடாத விடயங்கள்
காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்ப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இந்து மத சாஸ்திரங்களின்படி, காலையில் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது ஒரு அசுப அறிகுறியாகும்.
எனவே காலையில் எழுந்தவுடன் கண்ணாடியில் முகம் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று வாஸ்துசாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலை நேரத்தில் உடைந்த கடிகாரத்தைப் பார்க்கக் கூடாது.
உடைந்த கடிகாரத்தைப் பார்த்தால், நாள் முழுவதும் துன்பப்படுவீர்கள். வாஸ்து சாஸ்திரப்படி உடைந்த கடிகாரத்தை அல்லது ஓடாத கடிகாரத்தை வீட்டில் வைக்கக்கூடாது. கடிகாரத்தை உபயோகபடுத்தாமல் வைப்பதும் அசுபமாக கருதப்படுகிறது.
சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி, காலையில் அழுக்குப் பாத்திரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், சில காரணங்களால் சுத்தம் செய்யாத பாத்திரங்களை பார்த்தால் அது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, காலையில் எழுந்தவுடன் காட்டு விலங்குகளைப் பார்ப்பது அசுபமானது. எழுந்தவுடன் செல்லப்பிராணிகளைப் பார்த்தாலும் துன்பம் ஏற்படும் அபாயம் உள்ளது.
காலையில் எழுந்ததும் உங்கள் நிழலைப் பார்ப்பது வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் துர்திஷ்டத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |