உங்கள் வீட்டு அலுமாரியில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்!என்ன பொருட்கள் தெரியுமா?
நமக்கு தேவையான ஒரு சில விலை மதிப்பான பொருட்களாக நாம் கருதக்கூடிய பணம் மற்றும் நகை போன்ற பொருட்களை அலுமாரியில் தான் வைப்போம். பணத்திற்கு அதிபதியான மகா லட்சுமி தேவி அலுமாரியில் குடியிருப்பாராம்.
பூஜை அறையை எவ்வாறு நாம் சுத்தமாக வைத்திருப்போமோ அதே போல நம் வீட்டு அலுமாரியையும் சுத்தமாக லட்சுமி தங்குவதற்கேற்ப வைக்கவேண்டும். அலுமாரியில் இடம் இருப்பதற்காக எல்லா பொருட்களையும் வைத்து விடக்கூடாதாம்.
அலுமாரியில் பெரியோரின் படத்தை வைக்காதீர்கள்!
பூஜை அறையில் சாஸதிரப்படி நம் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது அதேபோல அலுமாரியிலும் நம் முன்னோர்களின் படத்தை வைக்கக்கூடாது.இவ்வாறு செய்தால் வீட்டில் நிறைய கஷ்டங்களும் துன்பங்களும் ஏற்படுமாம்.
துவைக்காத ஆடையை வைக்காதீர்கள்!
நீங்கள் ஒரு தடவை உடுத்திய ஆடையை என்னதான் காயவைத்தாலும் அதையே திருப்பி அலுமாரியில் வைக்கக்கூடாது.இது தரித்திரத்தையே தரும் என கூறப்படுகிறது.மற்றும் சண்டை ஏற்படும்.
மாதவிடாய் கால நாப்கின்களை வைக்கக்கூடாது!
அலுமாரியை நாம் கடவுளுக்கு சமனாக பார்ப்பதால் அதில் மாதவிடாய் கால நாப்கின்கள் மற்றும் துணிகளை வைக்கக்கூடாது.அப்படி வைத்தால் அதனை அப்புறப்படுத்தி விடுவது நல்லது.
ப்ளாஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது!
அலுமாரியில் ப்ளாஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது.அதறடகு பதிலாக மரத்தினாலான பணப்பெட்டியை வைத்தால் பண வரவு அதிகரிக்கும்.மற்றும் அத்தோடு அதில் மகா லட்சுமி படம்,குபேரர் படம்,லட்சுமி காசு,பச்சை கற்பூரம் போன்றவற்றை வைப்பது சிறந்தது.
ஆயுதங்கள் வைக்கக்கூடாது!
முக்கியமாக சிறிய மற்றும் பெரிய அளவிலான ஆயதங்களை வைக்கக்கூடாது.இது தன வரவினை தடை செய்யும்.