நீரழிவு நோயாளிகள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க! மீறினால் சிறுநீரக ஆபத்து
தற்போது உலகம் முழக்க நீரழிவு நோய் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நோயால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். அதாவது நீரிழிவு நோய் என்பது ரத்த ஓட்டத்தில் உள்ள அனைத்து சர்க்கரையையும் உடலால் செயல்படுத்த முடியாதபோது இது ஏற்படுகிறது.
ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய்.நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் உயர் இரத்த குளுக்கோஸ் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
அந்த வகையில் இந்த நோயினால் வரக்மூடிய சில அறிகுறிகளை நாம் அலட்சியம் செய்தால் அது தீராத சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும்.அது எந்தெந்த அறிகறிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கால் பிடிப்பு
கால் பிடிப்புகள்பொதுவாக எல்லோருக்கும் வருவதால் இது பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை. இத நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்பட்டால் அதற்கு காரணம் சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்படும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக இது ஏற்படும்.
இதனால் சிறுநீரக செயல்பாடு மோசமடைந்து தசைச் சுருக்கங்கள் மற்றும் வலிமிகுந்த பிடிப்புகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் இந்த கால் பிடிப்பு பிரச்சனைகளை புறக்கணிக்க கூடாது.
சேர்வு மற்றும் ரத்த சோகை
சிறுநீரக செயல்பாடு குறைவதால் கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் அதிகரிக்கும். இது சோர்வு உணர்வுக்கு வழிவகுக்கிறது. கூடுதலாக சிறுநீரகங்கள் எரித்ரோபொய்டின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இது இரத்த சிவப்பணு உற்பத்தியை அதிகரிக்கும்.
சிறுநீரகங்கள் சேதமடையும் போது உடலில் இருக்கும் ஹார்மோனின் அளவு குறைவது இரத்த சோகையை ஏற்படுத்தும். இது நிலையான சோர்வுக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த சோர்வை கவனிக்காமல் விட்டால் பெரும் பிரச்சனை ஏற்படுத்தும்.
தடுப்பு முறைகள்
நீரிழிவு நோயாளிகள் வழக்கமான இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்தை தொடர்ந்து பரிசோதித்து கொள்வது முக்கியம்.
சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிவது சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட சிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன. இதை தவிர்க்கும் போது டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதால் கவனம் தேவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |