மறந்தும் கூட இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க- ஆபத்து நிச்சயம்
சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் தான் செரிமானப்பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.
செரிமானத்தில் ஏதாவது கோளாறுகள் ஏற்படும் போது ஒட்டுமொத்த உடலிலும் அது தாக்கம் செலுத்துக்கின்றது.
சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நன்மை பயக்கும். ஆனால் எல்லா உணவுகளும் நன்மையை தராது.
மாறாக ஒரு சில உணவுகள் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
அந்த வகையில், வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்
1. உலகளவில் ரீதியில் உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்து வருகின்றது. இதனால் கல்லீரல், கணையம் மற்றும் செரிமான அமைப்பு பாதிக்கப்படலாம். இப்படியான பிரச்சினைகள் வெறும் வயிற்றில் சர்க்கரை உணவுகள் அல்லது சர்க்கரை கலந்த உணவுகளை சாப்பிடும் போது ஏற்படுகின்றது.
2. வறுத்த உணவுகளை வெறும் வயிற்றில் மறந்தும் சாப்பிடக் கூடாது. இதிலுள்ள அதிக கலோரிகள், உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அத்துடன் இதய நோய்கள் வருவதற்கான காரணியாகக் கூட இருக்கலாம்.
3. வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சர்க்கரை தின்பண்டங்களில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது முற்றிலும் ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிக்கும். இதனால் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இவற்றை தவிர்த்து முழு உணவுகள் மற்றும் பழுப்பு அரிசி, பார்லி மற்றும் தினை போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்து கொள்ளலாம்.
4. காபி குடிப்பது நல்லது என பலரும் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால் இது தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிகப்படியான காஃபின் எடுத்து கொண்டால் இதய நோய் மற்றும் செரிமான பிரச்சனைகள் வரலாம். ஆகவே எதுவாக இருந்தாலும் அளவாக எடுத்து கொள்வது சிறந்தது.
5. திரவ சமநிலை, இதயத் துடிப்பு, நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசைச் சுருக்கம் ஆகியவற்றிற்கு உப்பு அவசியமாகின்றது. அதிகப்படியான உப்பு கலந்த உணவுகளை எடுத்து கொண்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய பிரச்சனைகள் வரலாம்.
6. சிப்ஸ் மற்றும் மைக்ரோவேவ் பாப்கார்ன் போன்ற பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், உப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. இப்படியான உணவு பழக்கங்கள் உடல் பருமனை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு பழக்கம் அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |