நோன்பு நோற்கும் போது தவறியும் செய்ய கூடாதவை என்னென்ன தெரியுமா?
பொதுவாகவே அனைத்து மதங்களும் மனிதர்களை நல்ல வழியில் நடத்த வேண்டும் என்பதற்காகவே தோற்றம் பெற்றிருக்கின்றன.
மனிதர்கள் எத்தனை பிரிவுகளை பிரித்தாலும் எல்லா மதங்களும் ஒரே கருத்தை தான் வெவ்வேறு வழிகளிலும் போதிக்கின்றன.
அந்த வகையில் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சில முக்கிய விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தப்பட்சம் 5 முறை தொழுகை செய்ய வேண்டியது அவசியம். ஆனால் அதிகமாக நன்மை பெற வேண்டும் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் தொழலாம்.
இந்த மாதம் மிகவும் புனித தன்மை வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகின்றது. எனவே ரம்ஜான் மாதம் முழுவதும் ஏழைகளுக்கு நன்கொடைகளை வழங்குவதால் கூடுதலான நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த மாதம் முழுவதும் நாளை சூரிய உதயத்திற்கு முன்பு உணவோடு ஆரம்பித்து, பின்பு நோன்பு இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை துறக்க வேண்டும்.
இந்த புனித மாதத்தில் குர்ஆனை வாசித்து, அதில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் வாசகங்களின் அர்த்தம் அறிந்து வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டியதும் அவசியம்.
புனித நோன்பு மாதத்தில் முடிந்தவரை பிறரிடம் தன்மையாக நடந்து கொள்வதுடன் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம்.
தொழுகையின் போது தங்களது குடும்பத்தாரின் நலனுக்காகவும் பிறரின் நலனுக்காகவும். அல்லாஹ்விடம் தொழுகை செய்ய வேண்டும்.
நோன்பின் போது செய்யக்கூடாதவை
புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும் போது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக எந்த ஒரு உணவையும் சாப்பிடவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூடாது.
நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மது அருந்துவது அல்லது புகைப்பிடிப்பது அல்லது வேண்டுமென்றே வாந்தி எடுப்பது போன்ற செயல்களை ஒருபோதும் செய்யவே கூடாது. இது மிகப்பெரும் பாவச்செயலாக கருதப்படுகின்றது.
நோன்பு நோற்பவர்கள் பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, சண்டையிடுவது போன்ற விடயங்களில் ஈடுப்பட்டால் நோன்பு இருப்பதன் பலனை அடைய முடியாமல் போய்விடும்.
ரம்ஜான் நோன்பு காலப்பகுதியில் இசை கேட்பது போன்ற இன்பம் கொடுக்கும் விடயங்களை தவறியும் செய்யவே கூடாது. அதனால் நோன்பு அர்த்தமற்றதாக மாறிவிடுகின்றது.
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் அல்லது மாதவிடாய் சமயத்தில் பெண்கள் நோன்பு இருக்க கூடாது. மேலும் நோன்பு காலத்தில் மற்றவர்களுடனான பகையை நினைவில் கொண்டு வருவது தகாத வார்தைகளை பாவிப்பது போன்ற விடயங்கள் நோன்பின் பலனை இல்லாமல் செய்துவிடும்.
நோன்பு காலத்தில் அல்ஹாவை தொழுவதை தவிர்க்க கூடாது. நோன்பில் எந்த ஒரு தாமதத்தையும் ஏற்படுத்தாமல் சரியான நேரத்தில் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் நோன்பு நோற்பதன் முழு பலனையும் அடைய முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |