அயோத்தி ராமர் கோயிலுக்கு இலட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்த சினிமா பிரபலம் யார் தெரியுமா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுத்த பிரபலங்கள் தொடர்பிலான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது, நேற்று நடந்த கும்பாபிஷேக நிகழ்வில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த ராமர் கோயிலுக்கு இதுவரை 5000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது.
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா ட்ராஸ்டின் படி, இதுவரை கோவில் பிரதிஷ்டை நிதிக்கு ரூ. 3200 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ராம மந்திர் அறக்கட்டளை நாட்டின் 11 கோடி மக்களிடம் இருந்து ரூ.900 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வருடம் வரை 5000 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் ஆன்மீக குரு மொராரி பாபு மாத்திரம் இதுவரை கோயிலுக்காக 11.3 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கியுள்ளார்.
அதே சமயம், கோயிலுக்கு நன்கொடை கொடுத்த பிரபலங்களில், பல சினிமா பிரபலங்களும் இருப்பதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் நன்கொடை கொடுத்த பிரபலங்கள் யாவர்? எவ்வளவு தொகை நன்கொடையாக கொடுத்துள்ளனர்? என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகேஷ் கண்ணா - 1லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்
பவர் ஸ்டார் பவன் கல்யாண்- 30 லட்சம் ரூபாய்
நடிகை ஹேமமாலினி
நடிகர் மனோஜ் ஜோஷி
டிவி நடிகர் குர்மீத் சௌத்ரி
நடிகை ப்ரணிதா
தயாரிப்பாளர் மனீஷ் முந்த்
மேற்குறிப்பிட்ட பிரபலங்களை தாண்டி தெலுங்கு நடிகர் பிரபாஸ் விருந்து செலவு 50 கோடி ரூபாய் வரை செலவை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |