Vastu Tips: இந்த நேரத்தில் பணம் யாருக்கும் கொடுக்கக்கூடாதாம்.... அடுத்தடுத்து கஷ்டம் ஏற்படும்

Manchu
Report this article
நாம் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கும் போதும் சில வாஸ்து காரியங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பணம் கொடுக்கல், வாங்கலில் கூட நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்று பெரியோர் வீட்டில் கூறுவது உண்டு.
வாஸ்து முறைகளை பின்பற்றினால் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது வாழ்க்கையில் நேர்மறை மற்றும் செழிப்பைக் கொண்டுவருகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் பணப் பரிவர்த்தனைகளுக்கான விதிகள் மற்றும் நேரங்கள் கூறப்பட்டுள்ளன. பணப் பரிவர்த்தனைகளுக்கு வாஸ்து விதிகளைப் பின்பற்றாவிட்டால் வீட்டில் வறுமை ஏற்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பரிவர்த்தனைகளுக்கான சரியான நேரம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
எந்த நேரத்தில் பணம் கொடுக்கக்கூடாது?
மாலை நேரத்தில் பணம் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும். சூர்ய அஸ்தனமனத்திற்கு ப் பின்பு பணம் கொடுப்பது நல்லதாகும்.
சூரிய உதயமான உடனே பரிவர்த்தனை செய்யக்கூடாது. நிதி நடவடிக்கைக்கு இந்த நேரம் சாதமானது இல்லையாம்.
இதே போன்று பிரம்ம முகூர்த்தம், சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பான நேரத்தில் நிதி பரிவர்த்தனையை செய்யலாம்.
நமது பாரம்பரிய நம்பிக்கையின் படி, இந்த நேரங்களில் பணம் பரிவர்த்தனை செய்தால் பல நிதி சிக்கல்களை ஏற்படுத்துமாம், மேலும் செல்வத்தினை தரும் லட்சுமி தேவியை கோபப்படுத்தவும் செய்யும் என்று நம்பப்படுகின்றது.
காலை சூரிய உதயத்திற்கு முன்பு, நிதி பரிவர்த்தனைகளை முடிப்பதற்கு நல்ல நேரமாகக் கருதப்படுகின்றது.
மேலும் சூரிய உதயத்திற்கு சில மணி நேரங்களுக்கு பின்பு மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு இடைப்பட்ட நேரமும் பணம் கொடுத்து, வாங்குவதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
