பிறந்த குழந்தைக்கு கிரேப் வாட்டர், வசம்பு என கை வைத்தியம் செய்றீங்களா? மிகப்பெரிய ஆபத்தாம்
பிறந்த குழந்தைகளுக்கு நாம் செய்யும் சில விடங்களில் எதை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகள் பிறந்துவிட்டால், வீட்டில் உள்ள பெரியவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கூறுவார்கள். அதில் கை வைத்தியம் என்பது முக்கியமான ஒன்றாகும்.
ஆனால் கை வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் குழந்தைகளின் உயிருக்கு பிரச்சனையாகவும் மாறும் என்று கூறுகின்றனர்.

குழந்தையை பராமரிப்பது என்பது சாதாரண விடயமல்ல. வாய் திறந்து பேசாத பருவத்தில் இருக்கும் குழந்தைகள் எதற்காக அழுகின்றனர்... பசிக்குதா? உடல் பிரச்சனையா என கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக இருக்கின்றது.
சிலர் குழந்தை பிறந்ததும் செய்யும் பாரம்பரிய முறைகளை தவிர்க்க வேண்டுமாம். அவ்வாறு என்னென்ன கை வைத்தியம் செய்யக்கூடாது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

இதையெல்லாம் செய்யாதீங்க
குழந்தை பிறந்ததும் சர்க்கரை தண்ணீர் வைப்பது தமிழ் பாரம்பரியத்தில் பழக்கமாக இருந்தாலும் இதனை செய்யக்கூடாது என்கின்றனர் மருத்துவர். அவ்வாறு சர்க்கரை கலந்த தண்ணீர், தேன் இவற்றினை வைக்கக்கூடாதாம்.
பால் குறைவாக இருக்கின்றது, குழந்தைக்கு பால் போதுமானதாக இல்லை என பெரியவர்கள் பவுடர் பால் அல்லது பசும்பால் கொடுக்கக்கூறுவார்கள். அவ்வாறு தாய்க்கு முன்பு கூறுவதே பால் சுரப்பை தடுக்கலாம் என்றும், குறைந்த பட்சம் ஒரு வருடம் பால் பவுடர், பாக்கெட் பால், பசும்பால் இவற்றினை கொடுக்கக்கூடாது.

குழந்தை பிறந்த சில வாரத்திலேயே குழந்தையின் செரிமானத்திற்கு கிரேப் வாட்டர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தை வேறு காரணத்திற்கு அழுதாலும் வயிறு வலிக்கு அழுவதாக நினைத்து இந்த கிரேப் வாட்டர் கொடுப்பது கூடாது.
அதே போன்று குழந்தை அழுது கொண்டிருக்கும் போது நாக்கில் வசம்பு வைப்பது ஆபத்தான காரியமாகும். அதாவது வசம்பிற்கு பிள்ளை வளர்ப்பான் என்று பெயர் இருந்தாலும், இவ்வாறு குழந்தைக்கு வசம்பு கொடுப்பது கூடாது.

மேலும் குழந்தைக்கு 6 மாத காலம் வரை தண்ணீர் கொடுப்பது கூடாது. வெயில் காலம் என்று பலரும் குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். இவை தவறான செயல் என மருத்துவர் கூறுகின்றனர். குழந்தைக்கு தேவையான தண்ணீர் அதன் தாய்பாலில் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |