கட்டிலுக்கு கீழே மறந்தும் கூட இத வெச்சுடாதீங்க...இந்த விளைவுகளை சந்திக்க நேரிடும்!
வாஸ்து குறைபாட்டுடன் வீடு இருந்தால் பல பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதிலும் ஒருவரது வீட்டின் படுக்கை அறை, பூஜை அறை மிகவும் முக்கியமானது.
காலில் இந்த சின்ன அறிகுறி இருக்கா? உயிருக்கு ஆபத்து...புற்றுநோயோட ஆரம்பம்! நீரிழிவும் ஈசியா வரும்!
வாஸ்துப்படி ஒருவர் தங்களின் படுக்கையை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதேப் போல் படுக்கையின் கீழ் ஒருசில பொருட்களை எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக்கூடாது.
ஒருவேளை வைத்திருந்தால், அது வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இன்று படுக்கையின் கீழ் இருக்கக்கூடாத சில பொருட்களைக் காண்போம்.
சனிபெயர்ச்சியின் மாற்றம்... ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசியினர்கள்
இரும்பு
படுக்கைக்கு அடியில் இரும்பு பொருளை வைத்திருந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். இனி இந்த தவறை செய்யாதீர்கள். இதனால் குடும்பத்தில் எப்போதும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கண்ணாடி
கண்ணாடியை தலைக்கு பின்புறத்திலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ வைக்கக்கூடாது. ஒரு வேளை வைத்தால், திருமணமான தம்பதிகளிடையே சண்டையை ஏற்படுத்தி உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.
துடைப்பம்
கட்டிலுக்கு அடியில் துடைப்பத்தை வைக்கக்கூடாது. அது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையை வரவழைக்கும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம், நிதி நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
காலணிகள்
படுக்கைக்கு அருகில் அல்லது தலைக்கு அருகில் காலணிகளை வைத்துக் கொண்டு தூங்கக்கூடாது. இல்லாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
மின்சார பொருட்கள்
பயன்படுத்தாத மின்சார பொருட்கள் படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால் பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். அதோடு தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும்.