நீங்கள் சிக்கன் பிரியரா? கோழியின் இந்த பகுதியை மட்டும் சாப்பிடாதீங்க
இன்றைய காலத்தில் சிக்கன் பிரியர்கள் அதிகமாக உள்ள நிலையில், கோழியில் எந்த பாகத்தை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோழி
இன்றைய உலகில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் முக்கியமான உணவாக கோழி இருக்கின்றது. அதிலும் அசைவப் பிரியர்கள் என்றால் அவர்களின் சிக்கன் தான் முதலிடம் என்று கூற வேண்டும்.
அந்த அளவிற்கு விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் என்னதான் பிராய்லர் கோழி ஆரோக்கியம் இல்லை கூறினாலும், அதில் உள்ள கறி, மற்றும் சுவை இவற்றிற்காக அதை தான் வாங்கி சாப்பிடுகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சிக்கனை அதிகமாக தெரிவு செய்கின்றனர். எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படும் கோழி வகைகள் உடல் எடையைக் குறைப்பவர்களின் சிறந்த தெரிவாக இருக்கின்றது.
ஆனால் கோழியில் எந்த பகுதி உடம்பிற்கு நல்லது? எதை சாப்பிட வேண்டாம்? என்பதை மருத்துவர்கள் விளக்கத்துடன் இங்கு தெரிந்து கொள்வோம்.
எந்தப் பகுதி நல்லதல்ல?
கோழியின் தோல் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் இதில் அதிகமான கொழுப்புகள் உள்ளடங்கியுள்ளதுடன், எப்பொழுதும் ஃப்ரஷாக வைத்திருப்பதற்கு சில ரசாயனங்களையும் தோலில் சேர்க்கின்றனர்.
அதிலும் இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் பண்ணையில் வளர்க்கும் கோழிகளை சாப்பிடுவதையும் சற்று தவிர்க்க வேண்டும்.
கோழி தோலில் நிறைவுறா கொழுப்பு அதிகமாக இருப்பதால் கலோரிகள் அதிகரிப்பதுடன், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இவை கெடுதல் ஏற்படுத்துகின்றது.
ஆனால் சிக்கன் தோலில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்புகள் உள்ளதால் அதிகமாக எடுத்துக் கொள்ளாமல், 15 நாட்களுக்கு ஒருமுறை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.
கோழியின் எந்த பகுதி நல்லது?
அதிக புரதச்சத்து நிறைந்துள்ள கோழியின் மார்பகம் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது. உடல் எடையை கட்டுப்படுத்தவும், தசை வளர்ச்சிக்கும் கோழி மார்பகம் நல்லதாகும்.
இதே போன்று தொடைப் பகுதியும் சாப்பிடலாம். இதில் அதிக கொழுப்பு உள்ளது. சிக்கன் இறக்கையிலும் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால் இவற்றினை வறுத்து சாப்பிடுவதை தவிர்த்து குழம்பாக சாப்பிடலாம்.
ஆனால் கடைகளில் கிடைக்கும் பிராய்லர் மற்றும் பண்ணை கோழிகளை வாங்கி சாப்பிடாமல், நாட்டுக்கோழிகளை வாங்கி சாப்பிடுவது ஆரொக்கியத்திற்கு மிகுந்த நல்லதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |