9 மாதங்களுக்கு பிறகு பூமியின் காற்றை சுவாசித்த சுனிதா வில்லியம்ஸ்... வரவேற்ற டால்பின்கள்!
சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் பூமி திரும்பிள்ளமை உளகளாவிய ரீதியில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வகமாக கொண்டவர்.
வெறும் 8 நாட்கள் ஆய்வு பணிக்கான சென்று சூழ்நிலை காரணமாக சுனிதா வில்லியம்ஸ் உடன் அவரது குழுவும் விண்வெளியில் 9 மாதங்களாக தங்கியிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட டிராகன் விண்கலம் மூலம் இவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர்.
சுமார் 17 மணி நேர பயணத்திற்கு பின்பு இவர்கள் பாதுகாப்பாக பூமியை அடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா கடலில் பத்திரமாக இறங்கி மிதந்த டிராகன் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது.
டிராகன் விண்கலத்தில் உள்ளே இருந்த 4 விண்வெளி வீரர்களும் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டிராகன் விண்கலம் கடவில் விழுந்ததும் இவர்களை வரவற்கும் முகமாக டால்பின் மீன்கள் டிராகன் விண்கலத்தை சுற்றி வட்டமிட்ட காட்சிகள் இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
