நம்மில் பலர் அடிக்கடி பயன்படுத்தும் Dolo 650: எதற்காக? முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்
கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி என்றவுடனே பலரும் பரிந்துரைக்கும் மாத்திரை Dolo-650, சுயமாகவே எடுத்துக் கொள்ளும் வழக்கமும் உண்டு.
ஆனால் எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம்.
உங்களுக்கான அறிகுறிகளை பொறுத்து நோயின் தீவிரத்தை பொறுத்தே மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
இந்த பதிவில் Dolo-650 எதற்காக பயன்படுத்தப்படுகிறது, பக்கவிளைவுகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
Dolo-650
காய்ச்சல் மற்றும் அதீத வலிக்காக பயன்படுத்தப்படுகிறது.
மைக்ரேன், தலைவலி, பல் வலி, தொண்டை வலி, மாதவிடாய் வலி, தசை வலி, இருமல் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
கோவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் உதவியாக இருந்ததும் Dolo-650 தான்.
உணவுடன் சேர்த்தே Dolo-650 மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது, வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகள் தீவிரமாகலாம்.
நோயின் நிலையை பொறுத்து 4 மணிநேரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதனால் பக்கவிளைவுகள் பெரும்பாலும் இல்லை என்ற போதும்,
வயிற்றுவலி
குமட்டல்
வாந்தி
ஏற்படலாம், இதுதவிர இன்னும் பிற பக்கவிளைவுகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது?
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோயாளியாக இருந்தால் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
வேறு நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
Dolo-650 மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது ஆல்கஹாலை கண்டிப்பான முறையில் தவிர்க்கவும்.
கர்ப்பிணி பெண்ணாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வாமை, தோல் மற்றும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களும், உடலில் சோடியம் அளவு குறைவாக இருக்கும் நபர்களும் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கலாம்.
உடலில் நீர்வற்றி (Dehydration) ஆனவர்கள், மதுபானத்திற்கு அடிமையானவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |