தலையில் அதிகமான பேன் தொல்லையா? பாட்டியின் மூலிகை தைலம் ஒன்று போதும்
தற்போது இருக்கும் பெண் பிள்ளைகளின் அதீத பிரச்சனையாக இருப்பது தலையில் பொடுகு, பேன், முடி உதிர்வு போன்ற ஆயிரம் பிரச்சனைகள் கூறியிருக்கிறார்கள். இதற்கு ஒரு மூலிகை தைலம் பாட்டி செய்முறையில் பார்க்கலாம்.
தலையில் பேன் தொல்லைக்கு மூலிகை தைலம்
தலையில் இருக்கும் பேன் தொல்லை, பொடுகு தொல்லை இல்லாமல் இருந்தாலே நம் தலையில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இப்போது இருக்கும் சமுதாயம் எண்ணெய் தடவும் பழக்கத்தையே விட்டு விட்டது.
இந்த காரணத்தினால் தான் நமது தலையில் பல பிரச்சனைகள் வந்து பரட்டை தலை போல இருக்கிறது. முன்நைய காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அழகுசாதனப்பொருட்கள் எல்லாம் இயற்கையாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் நாம் இப்போது பயன்படுத்தும் பொருட்கள் ரசாயனம் கலந்தவை. இதற்கு முடிவாக ஒரு பாட்டி வீட்டு தைலம் இருக்கிறது.
மூலிகை தைலம்
மூலிகை தைலம் தயாரிக்க முதலில் வேப்பிலை, செம்பருத்தி பூ, செம்பருத்தி இலை, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த செம்பருத்தி பூவின் காம்பை உடைத்து பூவை மட்டும் தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு பத்து செம்பருத்தி பூ இருந்தால் பத்து செம்பருத்தி இலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் வேப்பிலையை எடுத்து அதையும் மற்றைய பொருட்களுடன் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தைலத்தில் வேப்பிலை இருந்தால் பேன் சீக்கிரம் இறந்து விடும். ஏனெனின் வேப்பிலை வாசம் பேனுக்கு பிடிக்காது, இதனால் தலையில் பேன் தொல்லை இருக்காது.
எடுத்துக்கொண்ட அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல சுத்தமான தேங்காய் எண்ணையை ஊற்றி சூடாக்க வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்த கலவையை அதில் சேர்க்க வேண்டும். அந்த பொருட்கள் அனைத்தும் எண்ணெய்யில் பொரிந்து அடியில் உறையும் வரை எண்ணையை காய்ச்ச வேண்டும்.
அடுப்பை கொஞ்சம் குறைந்த தீயில் வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக நிறம் மாறி காய்ச்சி வந்ததும் அடுப்பை விட்டு இறக்கி வைக்கணும்.
இறக்கிய எண்ணெய்யை வடிகட்டாமல் அப்படியே கண்ணாடி போத்தலில் ஊற்றி நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த இந்த தைலத்தை காலையில் குளிக்க முன்னர் முடியின் வேர் கால்களில் படும்படி தடவி, நன்றாக மசாஜ் செய்யுங்கள்.
இதை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு பின்னர் தலைக்கு வழமையாக பயன்படுத்தும் ஷாம்பூ பயன்படுத்தி கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவை செய்து வந்தால் தலையில் இருக்கும் பேன் ஓடி விடும். அதே சமயம் தலைமுடியும் நன்றாக வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
