நாய்கள் உங்களது செருப்பை கடித்து குதறுவதற்கு காரணம் என்ன? சுவாரசியமான தகவல்
வீட்டில் நாம் கழற்றி போட்டிருக்கும் செருப்புகளை சில தருணங்கள் நாய்கள் கடித்து விளையாடுவதை அவதானித்திருப்போம்.. இதற்கான அர்த்தத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செருப்பை கடிக்கும் செல்லப்பிராணிகள்
பொதுவாக இன்று நம்மில் பலரது வீடுகளில் செல்லப்பிராணியாக நாய்களை வளர்த்து வருகின்றனர்.
இவை பெற்றோர்களை விட வீட்டில் உள்ள குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்வதையும் அவ்வப்போது காணொளியில் அவதானித்தும் வருகின்றோம்.
ஆனால் சில நேரங்களில் இவை கோபத்தையும் வரவழைக்கும். கார், இருசக்கர வாகனம் செல்வதை துரத்தி துரத்தி குறைக்கும். இதனால் சில தருணங்களில் ஓனர்கள் பிரச்சனையை கூட சந்திப்பார்கள்.
இதை மற்றொரு விடயம் என்னவெனில் வீட்டில் நாம் கழற்றி போட்டிருக்கும் செருப்புகளை கடித்து குதறுவது தான்.
காரணம் என்ன?
நாய்களின் இந்த செயலுக்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது செருப்பு, துணி இவைகள் நாய்களும் அலாதி பிரியம் இருக்குமாம்.
குறித்த செருப்பு, துணி யாருடையதோ அந்த நபர்களிடம் விளையாடுவதைப் போன்று நினைத்தும், குறித்த நபரை தன்னுடனே வைத்துக்கொள்ள இப்படி செய்யுமாம்.
மேலும் தனக்கு பிரியவர்களை பிரிந்து அவதிப்படும் போது, அந்த பிரிவின் வேதனையை சரிசெய்யவும், இவ்வாறு ஆடைகள், செருப்பை கடித்து குதறி வைக்குமாம்.
ஆனால் சில தருணங்களில் பசி ஏற்பட்டாலும், வயிற்றில் புழுக்கள் காணப்படும் காரணத்திற்காக கூட செருப்பை கடித்து குதறுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |