குடும்ப பெண்களையும் மிஞ்சி விடும் போல… மில்லியன் பேரை வியக்க வைத்த கியூட் நாய்
மாயா என்று பெயரிடப்பட்டுள்ள ஸ்மோயிட் என்ற வகையைச் சேர்ந்த பெண் நாய் செய்யும் செயல்கள் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
மாயா என்ற பெண் நாய், விளையாடி முடித்தபிறகு தான் பயன்படுத்திய விளையாட்டுப் பொருட்களை, அதற்கான கூடையில் வைக்கிறது.
நாயின் உரிமையாளரைத் தினமும் காலை மிகவும் கனிவான முறையில் எழுப்பி விடுகிறது.
தனக்காக உணவு கேட்பதற்கு பதில் தனது உரிமையாளருக்கு உணவைப் பரிமாற முயற்சிக்கிறது.
உரிமையாளர் ஷாப்பிங் முடித்து வந்தால், பொருட்களை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல உதவுகிறது. இப்படி ஏகப்பட்ட நல்ல குணங்களை கொண்டுள்ள இது நல்ல பெண் எனப் பெயரெடுத்துள்ளது.
தற்போது இருக்கும் குடும்ப பெண்கள் கூட இது போல செய்ய மாட்டார்கள் என்றும் இந்த நாய் குட்டியின் செயல் பெண்களுக்கு சவால் விடுவது போல இருப்பதாகவும் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.