5 ஆண்டுகளாக பழிவாங்க துடிக்கும் நாய்! ஓர் சுவாரசிய சம்பவம்
இந்தியாவின் திருச்சூரில் நாய் ஒன்று 5 ஆண்டுகளாக ஒருவரை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், அது உண்மை தான்.
கேரளாவின் திருச்சூரில் பெரும்பிலாவு பேருந்து நிலையம் அருகே தெருநாய் ஒன்று உள்ளது, அப்பகுதியில் உள்ள மக்கள் நாய்க்கு உணவளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அந்தவழியாக சென்ற காரில் மோதி நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர், நாயும் பூரண நலம் பெற்று பேருந்து நிலையத்துக்கு திரும்பியது.
அன்றிலிருந்து இன்றுவரை அந்த வழியாக எந்த கார் சென்றாலும், பின்தொடர்ந்து மோப்பம் பிடித்து வருகிறதாம்.
முதலில் நாய் ஏன் இப்படி செய்கிறது என்று அப்பகுதி மக்களுக்குப் புரியாமல் இருந்துள்ளது. பிறகுதான் லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் சென்றால் அவர்களை எவ்வித தொந்தரவும் நாய் செய்வதில்லை.
ஆனால் கார் சென்றால் மட்டும் அவர்களை விரட்டி செல்வதை வழக்கமா கொண்டுள்ளது.
பின்னர்தான், இந்த நாய் தன்மீது மோதிய காரை தேடுகிறது என அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
நாயின் இந்த பழிவாங்கும் போராட்டம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
