நடுக்கடலில் உயிருக்கு போராடிய நாய்: ஹீரோவாக செயல்பட்ட நபரின் திக் திக் காட்சி
அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கடலில் தத்தளித்த நாய் ஒன்றினை ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலுக்குள் குதித்து காப்பாற்றியுள்ளார்்
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த நாய் யாருடையது என்று தெரியாமல் இருந்த நிலையில், அதன் கழுத்தில் இருந்த பெல்ட்டில் அதன் உரிமையாளரின் விபரம் இருந்துள்ளது.
இதனை அவதானித்த ஜக்கேப் அதன் உரிமையாளரிடம் தகவல் கூறியதோடு, உரிமையாளரிடம் நாயை ஒப்படைத்துவிட்டு, எவ்வாறு கடலுக்குள் மாட்டியது என்று கேட்டுள்ளார்.
அதாவது உரிமையாளர் தனது குடும்பத்துடன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு படகில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது,எதிர்பாராத விதமாக நாய்க்குட்டி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளது.
இதனை படகில் இருந்த யாரும் கவனிக்கவில்லை.படகில் பயணித்த உற்சாகத்தில் நாய்க்குட்டியின் மீது கவனம் செலுத்த குடும்பத்தினர் மறந்துவிட்டனர்.
கரை திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்தபிறகும் நாயுக்குட்டி இருக்கிறதா என்பதை கவனிக்கவில்லை.ஜேக்கப்பின் அழைப்பு வந்த பிறகு நாய்க்குட்டி காணவில்லை என்பதும், அது இத்தகைய இன்னல்களை எதிர்கொண்டுள்ளது என்பதும் இவர்களுக்கு தெரியவந்துள்ளது.
தனது உயிரைப் பணய வைத்து நாயைக் காப்பாற்றிய நபரை பாராட்டி வருகின்றனர்.
ஒ