பாரா கிளைடிங்கில் பறக்கும் நாய்: வைரலாகும் காணொளாி
ஓவாக்கா என்ற நாயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் நாயின் உரிமையாளர் அதனோடு சேர்ந்து மலைகளுக்குள் பாராகிளைட் செய்துள்ளார். 29 வினாடிகள் அடங்கிய அந்த வீடியோவில் ஓவாக்கா எனும் நாய் உரிமையாளருடன் மலையேற்றம், பாராகிளைட் , படகுப்பயணம் என அவர் அழைத்துச் செல்லும் எல்லா இடங்களுக்கு சென்று மகிழ்கின்றது. இந்த வீடியோ நாயின் பெயரிடப்பட்ட Ouaka.sam என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டது.
இது குறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில் , மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தத்தெடுத்த தனது நாயுடன் ஏற்பட்ட அற்புதமான அனுபவத்தின் சில படங்கள் . "இப்போது உலகம் முழுவதும் பறந்து செல்வோம்" என்று நாயின் உரிமையாளர் ஷாம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.