நாய்கள் எதை அதிகம் விரும்புகின்றது தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
செல்லப்பிராணிகள் என்றால் அனைவருக்கும் பிடித்த பிராணி நாய் தான். எல்லா மக்களும் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்கிறார்களோ அந்த அளவில் பாசம் வைத்து நாயை செல்லப்பிராணியாகவும் வளர்கிறார்கள்.
சிலர் குழந்தைகள் இல்லை என்ற பட்சத்தில் நாய்களை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். அந்த வகையில் செல்லப்பிராணியின் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது இந்த நாய்கள் தான்.
நாய்களை நாம் செல்லப்பிராணியாக வளர்க்கும் போது அது எதை அதிகமாக விரும்பகிறது ? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்லப்பிராணி நாய்கள்
நாம் நாய்களை வளர்த்தால் அது நம்மை விட்டு எங்கேயும் போகாது. அந்த அளவிற்கு நம்மீது பாசம் வைத்திருக்கும். நீங்கள் நாய்கள் வளர்த்தால் கவனித்து பாருங்கள் அந்த நாய்கள் டிவி பார்ப்பதை அதிகமாக விரும்பும்.
இது உண்மையாகும் நாய்கள் அதிகமாக டிவி பார்ப்பதை விரும்புகின்றன. இவைகளுக்கு தொலைக்காட்சி திரையின் ஒளி, ஒலி, நிறம் ஆகியவற்றை கண்டு மகிழ்ச்சியடைகின்றன.
இந்த பிராணிகள் நீச்சல் அடிப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயமாகும். இதனால் இவைகளின் ஆரோக்கியம் மேம்படுகின்றது.
டிவி பார்க்கும் நாய்களுக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். நாம் மனதை அமைதிப்படுத்த கேட்கும் பாடல்களை நாய்கள் அதிகம் கேட்கின்றன.
இந்த செல்லப்பிராணிகள் தங்கள் உரிமையாளர்களுடன் நடந்து செல்வதை அதிகம் விரும்புகின்றன. இவைகளை உரிமையாளர்கள் அணைத்தபடியோ, உரசியபடியோ உறங்க வைக்க விரும்புகின்றன.