நாய் அழுவது அசுப சகுணமா? நல்ல சகுணமா?
இந்து மதத்தில் பல நம்பிக்கைகள் அசுப மற்றும் சுப பலன்களாக கருதப்படுகின்றது. இதில் நாயின் அழுகையும் ஒன்றாகும். நாயின் அழுகை இந்திய பாரம்பரியத்தில் அசுப நிகழ்வாகவே பலரும் அவதானித்து வருகின்றனர்.
குறிப்பாக கிராமப் புறங்களில் இவ்வாறான நம்பிக்கை காணப்படுவதற்கு முக்கிய காரணம் நாய் பைரவரின் அவதாரம் அல்லது வாயில் காவலர் தெய்வம் என்று நம்பப்படுவதால் தான்.
பெரும்பாலான நபர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கு அதிகமாக விரும்புவார்கள். ஏனெனில் நாய் நன்றியுள்ள விலங்காக பார்க்கப்படுகின்றது. மேலும் அவை அழும் போது பல சமிக்ஞைகளையும் அளிக்கின்றது.
நாய் அழுவது நல்ல சகுணம்
இரவில் நாய் அழுதால் பைரவர் அல்லது கிராமத்தின் பாதுகாவலர் கடவுளின் அடையாளம் என்று நம்புகின்றனர்.
மேலும் கடவுள் அல்லது தெய்வம் உங்களது வீட்டை காப்பது போன்ற மகிழ்ச்சியும் அமைதியும் உங்களுக்கு ஏற்படும்.
பைரவரின் அதவாரமாகவும் கிராமத்தின் பாதுகாவல் தெய்வமாக பார்க்கப்படுவதால், எதிர்மறையான அடையாளமாக பார்க்கப்படுவதில்லை.
எப்பொழுது அபசகுணமாகும்?
அதாவது ஒருவரின் வீட்டின் முன்பு நாய் அழுகின்றது என்றால் அது பிரச்சினை ஏற்படுவதற்கான அறிகுறியாகும். கெட்டது நடக்க போகின்றது என்றும் மகிழ்ச்சி குறையப்போகின்றது என்று அர்த்தமாம்.
ஒருவரின் வீட்டின் முன்பு நாய் அழுவதும் மோசமான சாபம் அல்லது பயங்கரமான நிகழ்வுகளின் அறிகுறியாக உள்ளது. ஆனால் இவை எந்தவொரு மத நூல்களிலும், புராணங்களிலும், அறிவியலிலும் கூறப்படவில்லை.
நீங்கள் எந்தவொரு சூழ்நிலையும் கடந்து போகும் போது, அவற்றை நம்பிக்கையாகவே பார்க்க வேண்டுமே தவிர இவ்வாற நம்பிக்கையை மனதில் வைத்துக்கொண்டு சிந்திக்காமல் இருக்க நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |