உங்களை ஒரு நாய் கடித்தால் 20 நிமிடத்தில் இதை செய்ங்க - மீறினால் தலையை பாதிக்கும்
ஒரு தெரு நாய் உங்களை தவறுதலாக கடித்தால் உடனடியாக 20 நமிடத்திற்குள் இதை செய்வது பாதுகாப்பு.
நாய் கடி பாதுகாப்பு
தெருநாய்கள் காரணமாக ஏற்படும் தாக்குதல்களில், பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் செல்ல நாய்களும் ஆபத்தான முறையில் நடந்துகொள்கின்றன.
நாய் கடிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதுடன், தற்போது இது ஒரு பொதுநலக்கோளாறு என்று கருதப்படுகிறது. நாய் கடித்தால், அது ரேபிஸ் எனும் உயிருக்கு ஆபத்தான வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
இது ஒருவேளை நரம்பு முறையை தாக்கிவிட்டால், குணப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளுக்கு இது மிக அதிக ஆபத்தானது, ஏனெனில் கடி பெரும்பாலும் முகம் மற்றும் தலைப்பகுதியை தாக்குகிறது. எனவே நாய் கடித்தவுடன் இதை செய்வது முக்கியம்.
நாய் கடித்தவுடன் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
- முதலில், பீதி அடையவேண்டாம்.
- கடிக்கப்பட்ட பகுதியில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடும் நீரில் நன்றாக கழுவ வேண்டும்.
- இதனால் 99% தொற்று ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது.
- அதன்பிறகு, டெட்டால் அல்லது பொட்டாஷ் போன்ற கிருமிநாசினிகளை பயன்படுத்தவும்.
- மருத்துவரை உடனடியாக அணுகி, ரேபிஸ் தடுப்பூசி (ARV) செலுத்திக் கொள்ள வேண்டும்.
- கடி ஆழமாக இருந்தால், இம்யூனோகுளோபுலின் (Rabies Immunoglobulin – RIG) எனும் ஊசியும் அவசியம்.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் 37 லட்சத்திற்கு மேற்பட்ட நாய் கடி சம்பவங்கள் பதிவாகின்றன. இந்த நிலைமை குறித்து உச்சநீதிமன்றம் கூட கவலை தெரிவித்துள்ளது. தெருநாய்கள் இன்று மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமைக்கே ஆபத்தாக உள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
