லிப்டில் சிறுவனை கடித்த நாய்! வலியால் துடித்த அவலம்: கண்டுகொள்ளாமல் நின்ற பெண்
உத்தரபிரதேசத்தில் லிப்டில் இருந்த சிறுவனை நாய் கடித்ததால் வலியால் துடித்துக்கொண்டு இருந்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
லிப்டில் நாயுடன் இருந்த பெண்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ராஜ் நகரில் உள்ள லிப்டில் சிறுவன் முதலில் சென்றுள்ளார். பின்னர், பெண்மணி ஒருவர் நாயுடன் லிப்டில் வந்துள்ளார்.
அப்போது, சிறுவன் நகரும்போது நாய் அந்த சிறுவனின் தொடையில் கடித்துள்ளது. வலி தாங்க முடியாமல் சிறுவன் துடித்துக்கொண்டிருந்தார்.

வலியால் துடித்த சிறுவன்
ஆனால், சிறுவன் துடித்தபோதும் எதுவும் நடக்காதது போல நாயின் உரிமையாளர் கண்டும் காணாமல் இருந்துள்ளார். அதன் பின்னர், லிப்டிலிருந்து நாயை வெளியே அழைத்து சென்ற போதும் நாய் சிறுவனை கடிக்க முற்பட்டது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அப்பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பெண்ணின் மனிதாபிமானம் இல்லாத செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.