அடிபட்ட நாய் மருந்துகடையில் உதவி கேட்டு கெஞ்சிய காட்சி... மெய்சிலிர்க்க வைக்கும் புத்திசாலித்தனம்
மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது. இங்கு நாய் தனது புத்திசாலித்தனத்தை காட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கியில் மருந்துகடை நடத்துபவர் செங்கிஸ். விலங்கின ஆர்வலரான இவர் தெருநாய்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர். இவர் நாய்கள் உறங்குவதற்காகவே தன் கடையின் ஒருபகுதியில் படுக்கை வசதியும் அமைத்து இருக்கிறார். இந்நிலையில் தன் கடைக்கு நாய் ஒன்றுவர, செங்கிஸ் அதற்கு சாப்பாடு வைத்தார். ஆனால் நாயோ, உணவைச் சாப்பிடவில்லை.
மாறாக செங்கிஸைப் பார்த்து தன் காலை நீட்டி இருக்கிறது. அப்போது தான் அதன் காலில் அ டிபட்டு ரத்தம் வந்திருந்ததை கவனித்தார் செங்கிஸ். உடனே தன்னிடம் காலில் மருந்து போடச் சொல்லும் அதன் புத்திகூர்மையை வியந்து அதற்கு மருந்து போட்டுள்ளார். மருந்திட்ட பின்பு அந்த நாயும் அங்கேயே படுத்துக் கொண்டது. செங்கிஸின் மனிதநேயமும், நாயின் புத்திசாலித்தனமும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Senin o kimden yardım isteyeceğini bilen aklına,güzelliğine,usluluğuna kurban olurum.patisi kanamış,eczaneye girip patisini uzattı,yarasını gösterdi bana. pic.twitter.com/MUYE9yFM6j
— Badores (@badores) June 20, 2019