கால் உடைந்த எஜமானரை பார்த்து தானும் நொண்டிய செல்ல நாய்.. வைரல் காணொளி!
லண்டனில் வசித்து வருபவர் ரஸல் ஜோன்ஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையில் செல்கையில், தவறி விழுந்து கால் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவரை மீட்டு அக்கம் பக்கத்தினர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து நேரத்தில், கால் எலும்பு முறிந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பின் சரிசெய்ய கால்களில் கட்டு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது நாயை வழக்கம் போல நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, தனது எஜமானர் நொண்டி நொண்டி செல்வதை கண்ட நாயும், அவரைப் போலவே ஒற்றைக் காலைத் தூக்கியபடி நொண்டி பயணம் செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர்.
गजब है !! डॉगी भी लंगड़ाने लगा तो मालिक ने उसका भी एक्सरे कराया.. पता चला कि डॉगी बस मालिक की नकल करता था. ??
— Rajendra K (ABP Network) (@RajendraKadamb) January 18, 2021
Injured dog owner spends £300 on X-Rays and vets for his limping dog - only to learn he was only copying him out of sympathy.@PetaIndia @ViralPosts5 #London @ABPNews pic.twitter.com/yPTxXxlwcz