ஏ.சி பயன்பாட்டினால் Current Bill ஏறுமா? இரண்டிற்கு உள்ள தொடர்பை தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கோடைக்காலங்களில் ஏற்படும் வெப்பத்தை பொருத்து கொள்ள முடியாமல் வீடுகள், அலுவலகங்களில் AC பயன்படுத்துவார்கள். இதனால் வீடுகள், அலுவலகங்களில் அதிகமான மின் கட்டணம் வரும்.
இப்படியான நேரங்களில் சிலர் வீட்டில் விடிய விடிய AC ஓடினாலும் மின்சார கட்டணம் குறைவாகவே வர வேண்டும் என நினைப்பார்கள்.
வெப்பத்தை இல்லாமலாக்கி குளிர்ச்சியை மாத்திரம் நமக்கு தருவதால் ஏகப்பட்ட மின்சாரத்தை AC எடுத்து கொள்கின்றது. இதனால் ACயை மிகவும் குறைவான வெப்பநிலையில் வைக்காமல் 20 டிகிரிக்கு மேல் வைப்பது நல்லது.
இது மின்சார கட்டணத்தை கட்டுபாட்டில் வைக்கிறது. இது போன்ற டிப்ஸ்களை தொடர்ந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
மின் கட்டணத்தை குறைக்கும் வழிமுறைகள்
1. ACயை அடிக்கடி Service செய்து பயன்படுத்தினால் நன்றாக வேலை செய்யும். அத்துடன் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும். அத்துடன் ACயின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனின் பில்டரில் தூசு இருந்தால் AC காற்று குறைவாக வரும்.
2. வீட்டில் அல்லது அலுவலகத்தில் AC பயன்படுத்தும் முன்னர் கதவு, ஜன்னல் இரண்டையும் நன்றாக அடைத்து வைக்கவும். வெளியிலிருந்து வரும் அனல் காற்றை தடுத்து நமக்கு குளிர்ச்சியை தர AC நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். இதனால் அதிகமான மின்சாரம் செல்லும்.
3. AC பயன்பாட்டில் இருக்கும் பொழுது சிலருக்கு, ஏ.சி.யை இயக்கும்போது ceiling fan பயன்படுத்தலாம். இது அறை முழுவதும் காற்றை கொண்டு சென்று அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவிச் செய்கிறது. இப்படி செய்வதால் மின்சாரத்தை கட்டுக்குள் வைக்கலாம்.
4. AC பயன்படுத்தும் போது இருக்கும் Timer-ஐ “ON”செய்வது நல்லது. இது தானாகவே அறை குளிர்ந்த பின்னர் “OFF" ஆகி விடும். தொடர்ந்து AC வேலை செய்வதை தவிர்ப்பதால் மின் கட்டணம் குறையும்.
5. வெளிச்சத்தினால் வெப்பம் கடத்தப்படும். இதனால் AC பயன்பாட்டில் இருக்கும் பொழுது ஜன்னல்களை மூடி திரைச்சீலை போட்டு வைப்பது நல்லது. 6. AC வாங்கும் பொழுது அது அறைக்காக அல்லது வரவேற்பு அறைக்காக என்பதனை முடிவு செய்து வாங்க வேண்டும். அத்துடன் Inverter ACகளை பயன்படுத்தினால் மின் கட்டணம் குறைவாக வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |