குழந்தைக்கு பாராசிட்டமால் கொடுப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே குழந்தைகள் பெரியவர்களுடன் ஒப்பிடும் போது அடிக்கடி நோய்வாய்ப்படுவது வழக்கம். குழந்தைகளின் நோய்யெதிர்ப்பு அமைப்பு முழுமையாக வளர்ச்சியடையாததே இதற்கு காரணம்.
சிறு குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல் ஏற்படும் நிலையில், மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் மருந்தை பரிந்துரைக்கின்றனர். இதனை கையாளும் போது மிகுந்த கவனம் தேவை பாராசிட்டமால் மருந்தை குழந்தைகளுக்கு வழங்கும் போது ஏன் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும்?
இதன் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஏன் அதிகம் அக்கறை செலுத்த வேண்டும்? பொதுவாக பாராசிட்டமால் மருந்து, சிரப், சொட்டு மருந்து, மாத்திரைகள், ஊசிகள் போன்ற வடிவில் கிடைக்கிறது.
குழந்தைகளைப் பொறுத்தவரை, கிலோவுக்கு 10 - 15 மி.கி என்றளவில் பாராசிட்டமால் சிரப்பை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், பெற்றோர்கள் சிலர் காய்ச்சலில் இருந்து குழந்தைகள் சீக்கிரம் விடுபட வேண்டுமென்று நினைத்து, அதிக அளவு டோஸ் கொடுக்கிறார்கள்.
இன்னும் சிலர் மருத்துவர் கூறியதைத் தவறாகப் புரிந்துகொண்டு, பரிந்துரைத்தது 120 மி.கி என்றால், ஒரு டீஸ்பூன் (500 மி.கி) பாராசிட்டமால் கொடுக்கின்றனர். அதிகப்படியான அளவு அவர்களின் கல்லீரலை நேரடியாக பாதிக்கிறது.
உண்மையில், அதிக அளவு பாராசிட்டமால் ரசாயனம் கல்லீரல் செல்களை சேதப்படுத்தத் தொடங்குகிறது. இதன் காரணமாக கல்லீரல் சேதமடையத் தொடங்குகிறது. பாராசிட்டமால் அளவுக்கதிகமான அளவு மிகவும் தீவிரமான நிலை.
இதற்கான அறிகுறி இருந்தால், உடனே ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு குழந்தை பாராசிட்டமால் கொடுத்த பிறகு வயிற்று வலி ,எரிச்சல் ,பலவீனம் ,பசியின்மை , வயிற்றுப்போக்கு , குமட்டல் உணர்வு , எச்சில் அல்லது வாந்தியுடன் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இது மிகவும் ஆபத்தான நிலை உடனடியான வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம்.
பாராசிட்டமால் மட்டுமல்ல, மருத்துவர் குழந்தைக்கு என்ன மருந்து கொடுக்கிறார்களோ, எந்த அளவு, எந்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்று கவனமாகக் கேளுங்கள்.
மேலும், மருந்துகளை உட்கொண்ட பிறகு குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அது பற்றி மருத்துவரிடம் உடனே ஆலோசனை செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் விடயத்தில் அதிக அக்கறை மற்றும் விழிப்புணர்வு அவசியம் இல்லாவிடில் அபாயகரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |