இசையமைப்பாளர் அனிருத் இந்த தொழிலும் செய்கிறார்! வருமானம் கோடிகளில்
தமிழ் திரையுலகில் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தமிழ் படங்கள் மட்டுமன்றி தெலுங்கு ஹிந்தி ஆகிய படங்களுக்கும் இசையமைப்பாளராக உள்ளார்.
தற்போது அவரின் இசையில் திரையுலகிற்கு அடுத்தடுத்த படங்கள் வர இருக்கின்றன. இந்த வகையில் அவரின் ஹோட்டல் மூலம் அவர் பெறும் வருமானம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் 3 என்ற தனுஷ் நடிப்பில் வெளிவந்த படத்தின் மூலம் இசையில் அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற 'வை திஸ் கொலவெறி' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
இதற்குப்பிறகு அனிருத் பல படங்களில் இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.
தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்திலும் இவரின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, 'அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்' என்று கூறியிருந்தார்.
அனிருத் சில மாதங்களாகவே இசையில் பிஸியாக இருந்தார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின.
இவ்வாறு இசையில் பிஸியாக இருக்கும் அனிருத் தற்போது ஹோட்டல் ஒன்றும் நடத்தி வருகிறார்.
சம்மர் ஹவுஸ் ஈட்டறி
அனிருத் இசையில் கவனம் செலுத்தினாலும் தற்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து சம்மர் ஹவுஸ் ஈட்டறி என்ற ஹோட்டலை சென்னையில் அவர் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஹோட்டலில் சாதாரண காஃபியின் விலையே 30 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது என்றும் சூப் வகைகளின் விலை ஆரம்பமே 200 ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த ஹோட்டலில் டீ 100 ரூபாய், பாஸ்தா, கேக் வகைகள் 300 ரூபாய் என விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.
இந்த ஹோட்டலின் மூலம் அனிருத் பல கோடி ரூபாய் லாபம் பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.