வயிறு வீக்கம்.. கல்லீரல் பாதிப்பின் தீவிரம்- இனியும் தாமதம் வேண்டாம்!
பொதுவாக நம்மிள் பலருக்கு தற்போது மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும், தவறான உணவுப்பழக்கங்கள் காரணமாக உயிரை பறிக்கும் நோய்களின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக கல்லீரல் நோய் தற்போது இளம் வயதினருக்கு கூட அதிகமாக வருகிறது. அறிகுறிகள் எதுவும் பெரிதாக வெளியில் காட்டாமல் இறுதியில் மோசமான விளைவுகளை இந்த கல்லீரல் நோய் தருகிறது. இதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து விட்டால் உங்கள் வயிற்றில் நீர்க் கோர்த்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக உங்களுடைய வயிறு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக காணப்படும்.
வயிற்றில் நீர் கோர்த்துக்கொள்ளும் அசைட்டுகள் நிலையில் உங்கள் கல்லீரல் வீக்கமடைந்து காணப்படும். இது போன்று கல்லீரல் நோயின் மோசமான அறிகுறிகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பின் தீவிரநிலை

1. அசைட்டுகள் (Ascites):
உங்களுடைய கல்லீரல் சேதமடையும் போது, இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதன் விளைவாக உங்கள் வயிற்றில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனால் தான் வயிறு வீங்கியது போன்று இருக்கும்.
2. கல்லீரல் வீக்கம் (Hepatomegaly):
கல்லீரல் வீக்கமடையும் சமயத்தில் உங்களுடைய அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு வலியும் ஏற்படும். நாம் இதனை சரியாக கவனித்து பார்த்தால் வயிறு வீக்கம் அடைந்திருக்கும்.

3. சிரோசிஸ் (Cirrhosis):
நாள்பட்ட கல்லீரல் நோயை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் தீவிரமடைந்து சிரோசிஸ், கல்லீரலை கடினமாக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுத்து விடும். அந்த சமயத்திலும் உங்களுடைய வயிற்றில் நீர் கோர்த்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
4. பிற நோய்களின் தாக்கம்
கல்லீரல் நோயின் அறிகுறிகளில் மஞ்சள் காமாலை, தொடர்ச்சியான சோர்வு, குமட்டல், பசியின்மை, எடை இழப்பு, வயிற்று வலி, கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் முதன்மையானது. இது போன்ற அறிகுறிகள் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் உரிய மருத்துவரை அணுக வேண்டும்.

சிகிச்சை
கல்லீரல் நோய் அறிகுறிகள் இருந்தால் எந்தவித குழப்பமும் இல்லாமல் ரத்தப் பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் போன்ற இமேஜிங் சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வரும் அறிகுறிகளின் காரணத்தை இது போன்ற சிகிச்சைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |